அமெரிக்காவில் அலப்பறை கிளப்பும் ரஜினி! விஜய், அஜித்தை விரட்டி அடித்து சூப்பர்ஸ்டார் படைத்த மாபெரும் சாதனை
அமெரிக்காவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படம் என்கிற பெருமையை ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் பெற்றுள்ளது.
Jailer
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது ஜெயிலர் திரைப்படம் தான். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா, விடிவி கணேஷ், ஷிவ ராஜ்குமார், மோகன்லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்து உள்ளது.
அதுமட்டுமின்றி ஜெயிலர் படம் அடுத்தடுத்து பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து உள்ளது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படங்கள் லிஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளது ஜெயிலர். இந்த பட்டியலில் அஜித், தனுஷ் போன்ற நடிகர்களின் படங்கள் இடம்பெற்று இருந்தாலும் நடிகர் விஜய்யின் வாரிசு படம் இடம்பெறவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் வாரிசு படம் பெரிதும் சோபிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் ரஜினி ராஜ்ஜியம்... வாரிசு பட லைஃப் டைம் கலெக்ஷனை நான்கே நாட்களில் தட்டி தூக்கிய ஜெயிலர்
2023-ம் ஆண்டில் வெளியாகி அமெரிக்காவில் அதிகம் லாபம் ஈட்டிய படங்களின் பட்டியலில் ஜெயிலர் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக போர் தொழில் இரண்டாம் இடத்திலும், பொன்னியின் செல்வன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. அஜித்தின் துணிவு, தனுஷின் வாத்தி ஆகிய திரைப்படங்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளன. கடைசி இரண்டு இடத்தில் மாமன்னன் மற்றும் விடுதலை ஆகிய படங்கள் உள்ளன.
இந்த லிஸ்ட்டில் விஜய்யின் வாரிசு படம் இடம்பெறவில்லை. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.320 கோடி வசூலித்து இருந்தாலும் அமெரிக்காவில் இப்படத்தின் வசூல் மிகவும் சுமாராகவே இருந்தது. அங்கு வாரிசு படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே அப்படம் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு சிம்பிளாக வளைகாப்பு நடத்திய பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் - வைரல் கிளிக்ஸ் இதோ