பாக்ஸ் ஆபிஸில் ரஜினி ராஜ்ஜியம்... வாரிசு பட லைஃப் டைம் கலெக்ஷனை நான்கே நாட்களில் தட்டி தூக்கிய ஜெயிலர்
விஜய்யின் வாரிசு படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் நான்கே நாட்களில் முந்தி சாதனை படைத்து உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்தது. ஜெயிலர் படம் ரிலீசானது முதல் மக்கள் மத்தியில் அதிரிபுதிரியான வரவேற்பை பெற்று வருகிறது. தொடர் தோல்வியால் துவண்டு இருந்த ரஜினிக்கு இத்திரைப்படம் மாஸான கம்பேக் படமாக அமைந்துள்ளது. இதனால் செம்ம ஹாப்பியாக உள்ளார் ரஜினி.
ஜெயிலர் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனதால், இந்தியா முழுவதிலும் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தின் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளதால், தென்னிந்தியா முழுவதும் ஜெயிலர் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜெயிலர் படம் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இதையும் படியுங்கள்... நான்கு ஆண்டுகள் கழித்து நண்பர்களோடு.. இமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வெளியான புகைப்படங்கள்!
முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலை நெருங்கிய ஜெயிலர் திரைப்படம், இரண்டாம் நாள் முடிவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தது. பின்னர் மூன்றாம் நாள் இறுதியில் ரூ.220 கோடி வசூலித்திருந்த இப்படம், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முதல் நாளை விட அதிகம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நேற்று மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூலை வாரிக் குவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் விஜய்யின் வாரிசு படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை ஜெயிலர் திரைப்படம் நான்கே நாட்களில் தட்டித்தூக்கி உள்ளது. வாரிசு திரைப்படம் மொத்தமாக ரூ.320 கோடி வசூலித்து இருந்த நிலையில், அந்த வசூலை நான்கே நாட்களில் வாரிக் குவித்து கெத்து காட்டி இருக்கிறது ஜெயிலர். அதுமட்டுமின்றி ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர நான்கு நாட்கள் முடிவில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.32 கோடியும், கேரளாவில் ரூ.23 கோடியும், கர்நாடகாவில் ரூ.27 கோடியும், இதர மாநிலங்களில் ரூ.6 கோடியும், வெளிநாடுகளில் மட்டும் ரூ.135 கோடியும் ஜெயிலர் திரைப்படம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. நாளையும் விடுமுறையும் தினம் என்பதால் ஜெயிலர் வசூல் ரூ.500 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது சுற்றிவளைத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ஷிவாண்ணா - வைரலாகும் வீடியோ