ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது சுற்றிவளைத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ஷிவாண்ணா - வைரலாகும் வீடியோ

ஜெயிலர் படம் பார்க்க மைசூருவில் உள்ள தியேட்டருக்கு வந்த நடிகர் ஷிவ ராஜ்குமாரை ரசிகர்கள் சுற்றிவளைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Shiva Rajkumar mobbed by fans and pours love for his role in Jailer

ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீஸ் ஆனது முதல் தென்னிந்தியாவில் ஜெயிலர் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் இந்த அளவு வரவேற்பை பெற்று வருவதற்கு ரஜினி மட்டும் காரணமல்ல, அதில் நடித்த ஷிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் அடங்குவர். மோகன்லால் நடித்துள்ளதால் கேரளாவில் நேரடி மலையாள படம் போல் ரிலீஸ் ஆகி உள்ளது ஜெயிலர். அதேபோல் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் நடித்துள்ளதால், இப்படத்திற்கு கர்நாடகாவில் மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ளது.

நடிகர் ஷிவ ராஜ்குமாருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரஜினியைப் போல் கன்னடத்தில் ஏராளமான மாஸ் படங்களில் நடித்துள்ள ஷிவ ராஜ்குமாரை, ஜெயிலரில் கேமியோ ரோலில் தான் நடிக்க வைத்துள்ளார் நெல்சன். அது கேமியோ ரோலாக இருந்தாலும் நிச்சயம் ஒர்த் ஆனதாக இருக்கும் என நெல்சன் ஆடியோ லாஞ்சிலேயே கூறி இருந்தார். அவர் சொன்னபடியே, தியேட்டரே அதிரும் அளவுக்கு ஒரு மாஸ் சீனில் நடித்துள்ளார் ஷிவ ராஜ்குமார்.

இதையும் படியுங்கள்... டபுள் செஞ்சுரி அடித்த ஜெயிலர்... மூன்றே நாளில் இத்தனை கோடியா? தனக்கிருக்கும் பாக்ஸ் ஆபிஸ் பவரை நிரூபித்த ரஜினி

தமிழ்நாட்டிலேயே ஷிவ ராஜ்குமாரின் மாஸ் சீனுக்கு அரங்கம் அதிருகிறது என்றால் கர்நாடகாவில் சொல்லவா வேண்டும். அவரின் வெறித்தனமான ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்திருக்கிறது அந்த காட்சி. ரோலெக்ஸ் சூர்யாவுக்கு அடுத்தபடியாக கேமியோ ரோலில் நடித்து ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறார் ஷிவ ராஜ்குமார். 

இந்நிலையில், மைசூருவில் ஜெயிலர் படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருக்கிறார் ஷிவ ராஜ்குமார். அப்போது அவரது காரை சுற்றி வளைத்த ரசிகர்கள், அவரிடம் அன்பு மழை பொழ்ந்தனர். ரசிகர்கள் காட்டிய அன்பால் திளைத்துப் போன ஷிவ ராஜ்குமாருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஜெயிலரில் டார்க் காமெடியில் கலக்கிய இந்த நபர் ஜிம் டிரெய்னரா... 12 வருட நண்பனை காத்திருந்து களமிறக்கிய நெல்சன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios