ஜெயிலரில் டார்க் காமெடியில் கலக்கிய இந்த நபர் ஜிம் டிரெய்னரா... 12 வருட நண்பனை காத்திருந்து களமிறக்கிய நெல்சன்
நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் டார்க் காமெடியில் கலக்கிய தன்ராஜ் யார் என்பதை இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் தான் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. பீஸ்ட் தோல்விக்கு பின் கடும் ட்ரோல்களை சந்தித்த நெல்சன், தற்போது ஜெயிலர் மூலம் தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார். அதுவும் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக ஜெயிலர் படத்தை கொடுத்திருக்கிறார் நெல்சன். இயக்குனந் நெல்சனின் படங்கள் என்றாலே அதில் நிச்சயம் டார்க் காமெடி இருக்கும். கோலமாவு கோகிலாவில் தொடங்கி ஜெயிலர் வரை அதே பார்முலாவை பின்பற்றி வருகிறார்.
அதுமட்டுமின்றி படத்துக்கு படம் வித்தியாசமான காமெடி கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் நெல்சன். கோலமாவு கோகிலாவில் ரெடின் கிங்ஸ்லியை காமெடியனாக களமிறக்கி வெற்றிகண்ட நெல்சன், அடுத்ததாக டாக்டர் திரைப்படத்தில் மகாளி, கிளி மற்றும் பிஜார்ன் ஆகியோரை வைத்து காமெடியில் கலக்கி இருந்தார். இப்படி படத்துக்கு படம் வித்தியாசமான காமெடியன்களுடன் களமிறங்கு நெல்சன், ஜெயிலர் அறிமுகப்படுத்திய ஒரு காமெடியன் தான் தன்ராஜ்.
தன்ராஜ்
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்துள்ள விநாயகனின் நெருங்கிய நண்பனாக படத்தில் நடித்திருந்தார் தன்ராஜ். கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் வில்லன் மெட்டீரியலாக அவர் இருந்தாலும், அவரை வைத்து டார்க் காமெடி செய்துகாட்ட முடியும் என நிரூபித்துள்ளார் நெல்சன். அந்த தன்ராஜ் கேரக்டர், தன்னுடைய முதல் காட்சியிலேயே தற்கொலை செய்ய போவதாக கூறி அலப்பறை செய்யும் காட்சியிலேயே ஸ்கோர் செய்திருந்தார்.
இதையும் படியுங்கள்... டபுள் செஞ்சுரி அடித்த ஜெயிலர்... மூன்றே நாளில் இத்தனை கோடியா? தனக்கிருக்கும் பாக்ஸ் ஆபிஸ் பவரை நிரூபித்த ரஜினி
பின்னர் ரஜினியை வேவு பார்க்க விநாயகன், தன்ராஜையும், மாரிமுத்துவையும் அனுப்பும் போதே நிச்சயம் செம்ம காமெடி இருக்கு என எண்ண வைத்துவிடுகிறார் நெல்சன். ரஜினியை வேவு பார்க்க செல்லும் போது இவர் செய்யும் அலப்பறைகள் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளன. குறிப்பாக காரில் செல்லும் போது காலை சீட் மேலே போட்டுக்கொண்டு இவர் செய்யும் ரகளையால் தியேட்டரே சிரிப்பலையில் மூழ்கிவிட்டது.
இப்படி ஒரு கேரக்டரை நெல்சன் எங்கிருந்து பிடித்தார் என்பது தான் பலரின் கேள்வியாக இருந்தது. அந்த கேள்விகளுக்கு நெல்சனே சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி, தன்ராஜ் கேரக்டரில் நடித்த நபர் ஒரு ஜிம் டிரெய்னராம், அதுமட்டுமின்றி அவர் தனது 12 வருட கால நண்பர் எனவும் நெல்சன் கூறி இருக்கிறார். அவரின் நடவடிக்கைகள் பிடித்துப்போனதால், அவரை சரியான நேரத்தில் பயன்படுத்த நினைத்த நெல்சன், ஜெயிலரில் களமிறக்கி வெற்றி கண்டுள்ளார். அந்த நபர் இதற்கு முன்னதாக டாக்டர் படத்திலும் ஒரு சீனில் நடித்துள்ளதாக நெல்சன் அந்த பேட்டியில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ராசியில்லாத தங்கச்சி... அண்ணாத்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு விழுந்த அடுத்த அடி