MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராசியில்லாத தங்கச்சி... அண்ணாத்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு விழுந்த அடுத்த அடி

ராசியில்லாத தங்கச்சி... அண்ணாத்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு விழுந்த அடுத்த அடி

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது போலா ஷங்கர் படம் மூலம் மீண்டும் தோல்வியை சந்தித்து உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 13 2023, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து தமிழில், விஜய்யுடன் பைரவா, சர்க்கார், தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயன் ஜோடியாக ரெமோ மற்றும் ரஜினிமுருகன், ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் கீர்த்தி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற பின்னர் கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்ட படத்தில் குந்தவையாக நடிக்க முதலில் கமிட் ஆனது கீர்த்தி சுரேஷ் தான். ஆனால் அந்த சமயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், பொன்னியின் செல்வனில் இருந்து விலகினார் கீர்த்தி.

இதையும் படியுங்கள்... டபுள் செஞ்சுரி அடித்த ஜெயிலர்... மூன்றே நாளில் இத்தனை கோடியா? தனக்கிருக்கும் பாக்ஸ் ஆபிஸ் பவரை நிரூபித்த ரஜினி

34

சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படத்தில், ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இப்படம் தோல்வி படமாகவே அமைந்தது. இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு, மீண்டும் ஒரு தங்கச்சியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

44

அண்ணாத்த படத்தில் மிஸ் பண்ணியதை போலா ஷங்கர் படம் மூலம் மீட்டெடுத்து விடலாம் என ஆவலோடு காத்திருந்த கீர்த்தி சுரேஷை, கிரிஞ் நடிகையாக்கி விட்டது இந்த போலா ஷங்கர். அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.175 கோடி வசூலித்தது. ஆனால் போலா ஷங்கருக்கு அதில் பாதிகூட தேறாது என கூறப்படுகிறது. இதன்மூலம் ராசியில்லாத தங்கச்சி ஆகி இருக்கிறார் கீர்த்தி. போலா ஷங்கர் படத்தின் தோல்வியால் கீர்த்தி சுரேஷை நெட்டிசன்கள் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் தான் இந்த போலா ஷங்கர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மயிலை மறக்க முடியுமா... வியக்க வைக்கும் நடிகை ஸ்ரீதேவியின் ஹிட் லிஸ்ட் ஒரு பார்வை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கீர்த்தி சுரேஷ்
ரஜினிகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved