MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு சிம்பிளாக வளைகாப்பு நடத்திய பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் - வைரல் கிளிக்ஸ் இதோ

கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு சிம்பிளாக வளைகாப்பு நடத்திய பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் - வைரல் கிளிக்ஸ் இதோ

பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நிஷாவுக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 14 2023, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். இப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கணேஷ். இதையடுத்து தீயா வேலை செய்யனும் குமாரு, கோ, பனித்துளி, உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமனுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

24

இதனால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் கணேஷ். இந்நிகழ்ச்சியில் நேர்மையின் சிகரமாக இருந்த அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். பைனலில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட கணேஷ் வெங்கட்ராமனுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது. அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதையும் படியுங்கள்... ஹையோடா... திருமணத்துக்கு பின் ஷாருக்கான் உடன் ரொமான்ஸில் பிச்சு உதறிய நயன்தாரா - வைரலாகும் ஜவான் வீடியோ சாங்

34

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார்.

44

இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு வீட்டிலேயே சிம்பிளாக வளைகாப்பு நடத்தி இருக்கிறார் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை நிஷா. இதைப்பார்த்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் நிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நட்பே துணை.... 96 பட பாணியில் ஸ்கூல் நண்பர்களோடு ரீயூனியனில் கலந்துகொண்ட தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
படு ஜோராக நடந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு... படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
Recommended image3
சந்தேகப்பட்ட சரவணன்... அதிரடி முடிவெடுத்த தங்கமயில்; அதிர்ச்சியில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved