ஹையோடா... திருமணத்துக்கு பின் ஷாருக்கான் உடன் ரொமான்ஸில் பிச்சு உதறிய நயன்தாரா - வைரலாகும் ஜவான் வீடியோ சாங்

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Shahrukh khan and Nayanthara starrer Jawan movie Hayyoda video song

இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தான் ஜவான். அட்லீ இயக்கத்தில் இந்தியில் உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் இதில் பிரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், ஜவான் படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... முதல் பாடலே செம மாஸா இருக்கே... அனிருத் இசையில் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்- வைரலாகும் ஜவான் பர்ஸ்ட் சிங்கிள்

ஜவான் திரைப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் அப்படத்தில் இடம்பெற்ற வந்த எடம் என்கிற மரண மாஸ் பாடலை வெளியிட்டு இருந்தனர். அனிருத்தின் மாஸ் குத்து பீட்டுக்கு ஷாருக்கான் குத்தாட்டம் போட்ட அப்பாடலின் வீடியோ வெளியாகி யூடியூப்பில் செம்ம வைரலாகியது.

இந்நிலையில், தற்போது ஜவான் படத்தின் அடுத்த பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. ஹையோடா என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடி உள்ளார். இதன் இந்தி பதிப்பை அர்ஜித் சிங் பாடி இருக்கிறார். ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் அசத்தலான ரொமான்ஸ் காட்சிகள் நிரம்பி வழியும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள்... விஜய்யை தொடர்ந்து ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட அட்லீ... வைரலாகும் ஜவான் பாடலின் மெர்சலான மேக்கிங் வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios