அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படத்தில் இடம்பெறும் வந்த இடம் என்கிற பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக நான்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ, நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளனர். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஜவான் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், அப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்மையில் அனிருத் இசையில் ஜவான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது. வந்த இடம் என தொடங்கும் அப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அனிருத்தே பாடி இருந்தார்.

இதையும் படியுங்கள்... தியேட்டர்களை ஆக்கிரமித்த ஜெயிலர்... இந்த வாரம் ஓடிடியில் வரிசைகட்டி ரிலீஸ் ஆன தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

Jawan: The Making Of Vandha Edam |Shah Rukh Khan |Atlee |Anirudh | 7th September 2023

இந்நிலையில், வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோவை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் முழுவதும் சென்னையில் தான் படமாக்கப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்ட இப்பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் கோரியோகிராப் செய்துள்ளார். இப்பாடல் மேக்கிங்கின் மூலம் இப்பாடலில் அட்லீயும் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடனமாடி உள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் விஜய்யுடன் பிகில் படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடலுக்கு மட்டும் தலைகாட்டி சென்ற அட்லீ, தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் நடனமாடி உள்ளது இந்த மேக்கிங் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இப்பாடலில் ஷாருக்கான் தமிழில் பாடி நடனமாடியதையும் மேக்கிங் வீடியோவில் இணைத்துள்ளனர். அவர் தமிழில் பாடி முடித்ததும் அட்லீ சென்று ஷாருக்கானை கட்டிப்பிடித்த காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... ஜெயிலர் ரிசல்ட் பார்த்த உடன் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்... என்ன சொன்னார் தெரியுமா?