தியேட்டர்களை ஆக்கிரமித்த ஜெயிலர்... இந்த வாரம் ஓடிடியில் வரிசைகட்டி ரிலீஸ் ஆன தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ
ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு போட்டியாக தியேட்டரில் எந்த தமிழ்படமும் ரிலீஸ் ஆகாவிட்டாலும் ஓடிடியில் நிறைய படங்கள் வந்துள்ளன. அதன் விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், அதற்கு போட்டியாக படங்களை வெளியிடுவது படிப்படியாக குறைந்து வருகிறது. அப்படி ஒரு நிலைமை தான் தற்போது தமிழ் சினிமாவில் உள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி உள்ளதால், அப்படத்துடன் மோத பயந்து அதற்கு போட்டியாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டு உள்ளது. தியேட்டரில் படங்கள் ரிலீஸாகாவிட்டாலும், ஓடிடியில் நிறைய தமிழ் படங்கள் இந்த வாரம் ரிலீஸ் ஆகி உள்ளன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜூலை 14-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் யோகிபாபு, அதிதி ஷங்கர், சுனில், சரிதா, மிஷ்கின் ஆகியோர் நடித்திருந்தனர். தியேட்டரில் சக்கைப்போடு போட்ட இப்படம் ரூ.89 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்த நிலையில், இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
போர் தொழில்
விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் சரத்குமார், சரத்பாபு, அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்துக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு கிடைத்ததால், 50 நாட்களுக்கு பின்னர் இதனை ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் இன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் பாவனியை காதலித்து ஏமாற்றிவிட்டாரா அமீர்? இன்ஸ்டா பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள்
maayon
மாயோன்
சிபிராஜ் நடிப்பில் கடந்தாண்டு ஜூன் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் மாயோன். கிஷோர் என்பவர் இயக்கிய இந்த திரில்லர் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். சுமார் ஓராண்டாக ஓடிடியில் வெளியிடப்படாமல் இருந்த இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
ஆதிபுருஷ்
பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த திரைப்படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கிய இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்திருந்தனர். இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
வான் மூன்று
ஏ.எம்.ஆர் முருகேஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் வான் மூன்று. இப்படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷான், அபிராமி வெங்கடாசலம், லீலா சாம்சன், டெல்லி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்