அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலான வந்த இடம் என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தரமான நான்கு கமர்ஷியல் படங்களை கொடுத்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நடித்துள்ளார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதுதவிர பிரியாமணி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். அவரும் இப்படம் மூலம் தான் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் ஷாருக்கானும், அவரது மனைவி கெளரி கானும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... தாரை தப்பட்டை கிழிய போகுது.. அடுத்த 5 மாசமும் அதிரடி சரவெடியாய் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் படங்களின் லிஸ்ட் இதோ

Jawan: Vandha Edam Song |Shah Rukh Khan |Atlee |Anirudh |Nayanthara |Vijay Sethupathi |Deepika

இந்நிலையில், ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகி உள்ள இப்பாடலை தமிழில் அனிருத் தான் பாடி உள்ளார். வந்த இடம் என தொடங்கும் இப்பாடலுக்கு ஷாருக்கான் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ காட்சிகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஷாருக்கான் உடன் ஏராளமான நடனக் கலைஞர்களும், நடிகை பிரியாமணியும் சேர்ந்து ஆடியுள்ள இந்த பாடலை பார்த்த ரசிகர்கள், ஷங்கர் படம் போல் பிரம்மாண்டமாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். அனிருத் பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே செம்ம மாஸ் ஆன பாடலை கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மும்பையில் 3 பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பை ரூ.103 கோடிக்கு வாங்கிய பிரபல தயாரிப்பாளர்