Asianet News TamilAsianet News Tamil

மும்பையில் 3 பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பை ரூ.103 கோடிக்கு வாங்கிய பிரபல தயாரிப்பாளர்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான தினேஷ் விஜன் மும்பையில் ரூ.103 கோடிக்கு மூன்று அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளாராம்.

Bollywood producer dinesh vijan buys 3 flats for rupees 103 crores in mumbai bandra
Author
First Published Jul 31, 2023, 12:53 PM IST

பாலிவுட்டின் கூடாரமாக விளங்கி வருகிறது மும்பை. இங்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் சொந்தமாக வீடுகளை வாங்கிக் குவித்துள்ளனர். சமீபத்தில் தமிழ் திரையுலக பிரபலங்களும் மும்பையில் வீடு வாங்குவதை காண முடிந்தது. குறிப்பாக குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் நடிகர் சூர்யா, அங்கு சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி இருந்தார். அதேபோல் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கும் இயக்குனர் அட்லீக்கும் மும்பையில் சொந்தமாக வீடு உள்ளது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான தினேஷ் விஜனும் மும்பையில் சைலண்டாக ரூ.103 கோடிக்கு மூன்று அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிப் போட்டுள்ளார். பந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் தற்போது வானுயர கட்டப்பட்டுள்ள வரும் அபார்ட்மெண்ட்டை தான் தினேஷ் விஜன் வாங்கி இருக்கிறாராம். 

இதையும் படியுங்கள்... அடேங்கப்பா மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா... பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த டிடி ரிட்டன்ஸ்!

Bollywood producer dinesh vijan buys 3 flats for rupees 103 crores in mumbai bandra

சுமார் 9 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பினை சொந்தமாக வாங்கி இருக்கும் தினேஷ் விஜன், அதற்கான பத்திர செலவுக்கு மட்டும் ரூ.6.5 கோடி செலவு செய்துள்ளாராம். சமீபத்தில் தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்த ஜீ கர்தா என்கிற வெப் தொடரை தினேஷ் விஜன் தான் தயாரித்து இருந்தார். இதுதவிர ஏராளமான படங்களை தயாரித்துள்ள இவர் இவர் இந்தியில் ராப்டா என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி உள்ளார்.

தினேஷ் விஜன் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி உள்ள இதே பந்த்ரா பகுதியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கடந்தாண்டு ஒரு ஆடம்பர பங்களாவை சொந்தமாக வாங்கினார். அதன் மதிப்பு ரூ.119 கோடி என கூறப்படுகிறது. அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும் விரைவில் இந்த ஏரியாவில் கடற்கரையோரம் ஒரு பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றை கட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... தாரை தப்பட்டை கிழிய போகுது.. அடுத்த 5 மாசமும் அதிரடி சரவெடியாய் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் படங்களின் லிஸ்ட் இதோ

Follow Us:
Download App:
  • android
  • ios