அடேங்கப்பா மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்ஷனா... பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த டிடி ரிட்டன்ஸ்!
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.
DD returns
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது முழு நேர ஹீரோவாகி விட்டார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி ரிட்டன்ஸ். இது தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகம் ஆகும். தில்லுக்கு துட்டு படங்களின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. அந்த இரண்டு படங்களையும் ராம்பாலா இயக்கி இருந்தார். தற்போது தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகமாக வெளியாகி இருக்கும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.
DD returns
டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். மேலும் பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, தீபா, மாறன், தங்கதுரை என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தோனி தயாரித்த எல்.ஜி.எம் திரைப்படத்துக்கு போட்டியாக கடந்த ஜூலை 28-ந் தேதி திரைக்கு வந்தது டிடி ரிட்டன்ஸ் திரைப்படம்.
இதையும் படியுங்கள்... ரூ.3 ஆயிரம் கோடி சொத்து... தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா? ரஜினி, விஜய்-லாம் லிஸ்ட்லயே இல்ல!
DD returns
வெளியானது முதல் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனே இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கூறியதால், படத்தை ஏராளமானோர் பார்த்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இப்படத்தின் இரண்டாம் பாதியில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு நிறைய காமெடி காட்சிகள் உள்ளன. நடிகர் பெப்சி விஜயன் டே... டே... டே.. டேய் என கூறிக்கொண்டே வரும் காமெடி காட்சியெல்லாம் குபீர் சிரிப்பு ரகம். இப்படி எக்கச்சக்கமான காட்சிகள் இப்படத்தில் உள்ளன.
DD returns
திரையரங்கில் சக்கைப்போடு போட்டு வரும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு வசூலும் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது. அதன்படி இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.11 கோடி வசூலித்துள்ளதாம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9 கோடி வசூலை டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால், சந்தானம் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக டிடி ரிட்டன்ஸ் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வேட்டையன் ராஜாவாக மாஸ் காட்டும் ராகவா லாரன்ஸ்... இணையத்தை கலக்கும் சந்திரமுகி 2 பர்ஸ்ட் லுக்