வேட்டையன் ராஜாவாக மாஸ் காட்டும் ராகவா லாரன்ஸ்... இணையத்தை கலக்கும் சந்திரமுகி 2 பர்ஸ்ட் லுக்
ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் வேட்டையன் லுக் வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்திய படங்களில் சந்திரமுகி-யும் ஒன்று. பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் நடிகர் ரஜினிகாந்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு - ரஜினி இடையேயான காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு ஒரு மாஸ்டர் பீஸ் படமாக சந்திரமுகி 2 இருந்து வரும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ளார். அதேபோல் ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசு தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தான் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரித்து உள்ளது. சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... ரசிகர்களின் மனம்கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த சீசனோடு நிறுத்தப்படுகிறதா..! வெளியான அதிர்ச்சி தகவல்
சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற இவர், அதன்பின் இசையமைக்கும் முதல் படம் சந்திரமுகி 2 தான். சமீபத்தில் இப்படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகளின் போது படத்தை பார்த்து மிகவும் பயந்துபோனதாகவும், படம் சூப்பராக இருப்பதாகவும் தன்னுடையை முதல் விமர்சனத்தை கூறி இருந்தார் கீரவாணி.
சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸின் மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. வேட்டையன் ராஜா தோற்றத்தில் கம்பீர நடைபோட்டு வரும் ராகவா லாரன்ஸின் இந்த மாஸ் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ரூ.3 ஆயிரம் கோடி சொத்து... தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா? ரஜினி, விஜய்-லாம் லிஸ்ட்லயே இல்ல!