பிரதமர் சொன்னதை தட்டாமல் செய்யும் ரஜினிகாந்த்... போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்!
சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரோபைல் பிச்சரை தேசிய கொடியாக மாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, தன்னுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவை சூப்பர் ஸ்டாராக ஆட்சி செய்துகொண்டிக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், திடீர் என அரசியலுக்கு வரப்போவது இல்லை என கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் ரஜினிகாந்த். தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் 'அண்ணாத்த' படம் வெளியான நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னையில் துவங்கிய நிலையில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரஜினிகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ப்ரோபைல் பிச்சரை தேசிய கொடியாக மாறினார். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆக உள்ளதை முன்னிட்டு, இந்த ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய பாரத பிரதமர் மோடி, அனைவரது வீட்டிலும் தேசியக்கொடி என்கிற திட்டத்தின் படி, ஆகஸ்ட் 13 முதல் 15 தேதி வரை அனைவரது வீடுகளிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் செய்திகள்: ஏடாகூடமாக புடவையை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு படு மோசமாக போஸ் கொடுத்த 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன்!
அதே போல் மக்கள் அனைவரும் தங்களுடைய WhatsApp, twitter, Instagram போன்ற சமூக வலைதள பக்கங்களில் ப்ரொபைல் பிச்சராக தேசிய கொடியை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மலையாள திரையுலகை சேர்ந்த, மோகன் லால், மமூட்டி போன்ற முன்னணி நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய ப்ரொபைல் பிச்சர் ஆக, தேசிய கொடியை மாறினர். அந்த வரிசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் செல்வராகவன் போன்ற தமிழ் பிரபலங்கள் சிலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரோபைல் பிக்ச்சராக தேசிய கொடியை வைத்தனர்.
இதை தொடர்ந்து தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில், தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாரத பிரதமர் கூறியதை தலைவர் தவறாமல் செய்கிறார் என நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: படு பயங்கரம்.. ஜாக்கெட்டுக்கு முன்னாள் ஜன்னல் வைத்து... சேலையை சரிய விட்டு ஓப்பனாக காட்டும் தமன்னா! போட்டோஸ்..