MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய ரஜினிகாந்த்? தலைவர் 171 படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய ரஜினிகாந்த்? தலைவர் 171 படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்திற்கு மிகப்பெரிய தொகையை நடிகர் ரஜினிகாந்த் சம்பளமாக பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2 Min read
Author : Ramya s
| Updated : Nov 22 2023, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையில் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினியின் படங்களுக்கு இன்றளவுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான ஜெயிலர் படமே மிகப்பெரிய உதாரணம்.

26

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் உலகளவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராக ரஜினிகாந்த் கருதப்படுகிறார். இப்படம் 23 நாட்களில் 640 கோடி ரூபாய் வசூல் செய்து பல்வேறு சாதனைகளை முறியடித்தது. இப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த 2-வது தமிழ் படமாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

36

எனவே புதிய சாதனைகளை படைப்பதோ அல்லது ஏற்கனவே உள்ள சாதனைகளை முறியடிப்பதோ நடிகர் ரஜினிக்கும் ஒன்றும் புதிதல்ல. இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார். லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்திற்கு மிகப்பெரிய தொகையை அவர் சம்பளமாக பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

46
Super Star Rajinikanth

Super Star Rajinikanth

தலைவர் 171க்கு ரஜினிக்கு எவ்வளவு சம்பளம்?

தலைவர் 171 படத்திற்கு ரஜினிகாந்த் ரூ. 260-280 கோடி வரை சம்பளம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறி உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரஜினி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

56

தலைவர் 171க்கு ரஜினிக்கு எவ்வளவு சம்பளம்?

தலைவர் 171 படத்திற்கு ரஜினிகாந்த் ரூ. 260-280 கோடி வரை ஊதியம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியா மட்டுமின்றி ஆசியா முழுவதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறி உள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரஜினி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைவர் 171-ல் ரஜினிக்கு வில்லனா... ஆள விடுங்கடா சாமினு தெறித்தோடிய விஜய் சேதுபதி - காரணம் என்ன?
 

66

தலைவர் 171 படத்திற்கு முன்னதாக ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம் சமூக அக்கறை கொண்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இதில் நடிக்க உள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
லோகேஷ் கனகராஜ்
பிரபாஸ்
ரஜினிகாந்த்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved