தலைவர் 171-ல் ரஜினிக்கு வில்லனா... ஆள விடுங்கடா சாமினு தெறித்தோடிய விஜய் சேதுபதி - காரணம் என்ன?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.
vijay sethupathi
லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 171. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானாலும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தான் தொடங்க உள்ளனர்.
lokesh kanagaraj, Rajinikanth
லியோ பட வெற்றிவிழாவை கொண்டாடிய பின்னர் சிறிது நாட்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிவெடுத்துள்ள லோகேஷ், அதன்பின்னரே தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளார். ஆறு மாதங்களில் தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்டை ரெடி செய்துவிட்டு ஷூட்டிங்கை தொடங்க உள்ளாராம் லோகேஷ். மேலும் இப்படம் எல்சியுவில் வராது என திட்டவட்டமாக கூறிவிட்டார் லோகி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vijay sethupathi rejected Thalaivar 171
இந்த நிலையில், இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸை லோகேஷ் அணுகி உள்ளதாக தகவல் கசிந்தது. ஆனால் அதற்கு முன்னர் விஜய் சேதுபதியை தான் வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம் லோகேஷ். விஜய் சேதுபதி அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் எந்த படத்திலும் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துள்ளது ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Rajinikanth, Raghava Lawrence
மறுபுறம் கேட்ட சம்பளத்தை கொடுக்காததால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதனால் தான் அந்த வாய்ப்பு தற்போது லாரன்ஸுக்கு சென்றுள்ளது. இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் இடம்பெற்ற சந்தனம் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் தான் முதலில் வில்லனாக நடிக்க இருந்தார். அந்த சமயத்தில் கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகியதை அடுத்து அந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சௌந்தரபாண்டி செய்யும் சூழ்ச்சி... பரணி - கார்த்திக் இடையேயான சந்திப்பு நிகழுமா? அண்ணா சீரியல் அப்டேட்