விளம்பர படத்தில் நடிக்க இயக்குனர் ராஜமௌலிக்கு இத்தனை கோடி சம்பளமா? ஹீரோக்கள் கூட இவ்வளவு வாங்கமாட்டாங்க!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும்,எஸ்.எஸ். ராஜமவுலி, விளம்பர படம் ஒன்றில் நடிக்க சுமார் 30 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இயக்குனரும், கதாசிரியருமான, விஜயேந்திர பிரசாத்தின் மகன் தான் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி. கடந்த 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஸ்டூடன்ட் நம்பர் 1' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, மீண்டும் ஜூனியர் என்டிஆர்-யை ஹீரோவாக வைத்து சிம்ஹாத்ரி என்கிற படத்தை எழுதி, இயக்கி இருந்தார் ராஜமௌலி.
Image: Varinder Chawla
ஒரே மாதிரியான கதைகளத்தில் படங்களை இயக்காமல், தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வந்த இயக்குனர் ராஜமவுலி கடந்த 2009 ஆம் ஆண்டு சரணை வைத்து இயக்கிய 'மகதீரா' திரைப்படம், உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. தெலுங்கு மற்றும் இன்றி தமிழ் , கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ரஜினி - கமலுக்கு நோ.. அட்ஜஸ்ட்மெண்டிலும் நடிகர்களின் காதல் வலையிலும் சிக்காத ஒரே நடிகை இவங்கதானம்!
அதேபோல் 2012 ஆம் ஆண்டு வெளியான 'ஈ' படத்தையும் வித்யாசமான கதைகளத்தில் இயக்கி இருந்தார். நானி ஹீரோவாக நடித்திருந்த, இந்த படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார். சமந்தாவை அடைய, அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் நானியை கொடூரமாக கொலை செய்யும் வில்லனை பழி வாங்க ஈ-யாக மறுபிறவி எடுக்கும் நானி, வில்லனை காதலி உதவியுடன் எப்படி பழி வாங்குகிறார் என்பதை ரசிக்கும் படி அனிமேஷன் காட்சிகளுடன் இயக்கி இருந்தார் ராஜமௌலி.
Rajamouli
இதைத்தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி தென்னிந்திய திரையுலகை, பெருமை படுத்திய ராஜமௌலி... ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம், தன்னுடைய திறமையை உலகறிய செய்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற, நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற்று இந்திய திரையுலகை பெருமைப்படுத்தியது.
கனவு நிறைவேறியது... 118 நாட்களுக்கு பின் நிறைவடைந்த 'தங்கலான்' படப்பிடிப்பு! நடிகர் விக்ரம் ட்வீட்!
Rajamouli
அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபுவை வைத்து சூப்பர் மேன் கான்செப்ட்டில் ஒரு இயக்க உள்ளதாகவும், இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது செல்போன் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க, 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் இயக்குனர் ராஜமௌலி.
பொதுவாக விளம்பர படங்களில் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலே அது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், ஹீரோக்களையே மிஞ்சும் அளவில் இவருக்கு, இந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் ஓராண்டுக்கு பணியாற்ற ராஜமௌலிக்கு இந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர இந்த செல்போன் நிறுவனத்திற்கு விளம்பர படம் ஒன்றையும் ராஜமவுலி இயக்கி தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் சேர்த்து தான் இந்த சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜமவுலி கடைசியாக இயக்கிய ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கியதற்காக 100 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படும் நிலையில், அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து இயக்க உள்ள படத்திற்கு சுமார் 300 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுவது.