ரஜினி - கமலுக்கு நோ.. அட்ஜஸ்ட்மெண்டிலும் நடிகர்களின் காதல் வலையிலும் சிக்காத ஒரே நடிகை இவங்கதானம்!
நடிகைகளை பற்றி தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும், பயில்வான் ரங்கநாதன் எந்த ஒரு நடிகரின் காதல் வலையிலும், அட்ஜஸ்ட்மென்ட்க்கு இடம் கொடுக்காத நடிகை பற்றி புகழ்ந்து பேசி உள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சமீக காலமாக பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்துள்ளதாக வெளிப்படையாகவே கூறி உள்ளார். அதேபோல் ஆரம்ப காலத்தில் சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
ஆனால், இப்படி எந்த அட்ஜஸ்ட்மெண்ட்டும் செய்யாமல் ஹிட் படங்களில் நடித்து முன்னணி இடத்திற்கு வரும் நடிகைகள் கூட, சில முன்னணி நடிகர்களுடன் டேட்டிங் மற்றும் காதல் வலையில் சிக்கி விடுகிறார்கள். ஆனால் இப்படி எந்த ஒரு கிசுகிசு மற்றும் நடிகர்களிடம் மயங்காமல், விஜய் - அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே ஜோடி போட்ட நடிகை ஒருவரை பற்றி தான் பயில்வான் ரங்கநாதன் புகழ்ந்து பேசி உள்ளார்.
90களில் தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் சுவலட்சுமி. கொல்கத்தாவை சேர்ந்த இவர், பெங்காலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவரை தமிழில் ஆசை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இயக்குனர் வசந்த் தான். இதைத்தொடர்ந்து கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், பொன் மனம், என் ஆச ராசாவே, மாயி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நதி கரையினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்பெஷல் விருதையும் பெற்றார்.
திரை பட வாய்ப்புகள் குறைந்த பின்னர், சின்னத்திரை சீரியல் பக்கம் சாய்ந்த சுவலக்ஷ்மி, 'சூலம்' என்கிற சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து, கடந்த 2002 ஆம் ஆண்டு Swagato Banerjee என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
கனவு நிறைவேறியது... 118 நாட்களுக்கு பின் நிறைவடைந்த 'தங்கலான்' படப்பிடிப்பு! நடிகர் விக்ரம் ட்வீட்!
இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், முரளி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த போது... கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளை கூட வேண்டாம் என மறுத்து விட்டாராம். அதே போல் பல நடிகர்கள் இவருக்கு காதல் வலை விரித்தும், அந்த காதல் வலையில் சிக்காமல் மிகவும் கண்ணியமாக இருந்தவர் என பயில்வான் சுவலக்ஷ்மி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.