ரஜினிகாந்த் 24 ஆண்டுகளாக தக்கவைத்த சாதனையை தகர்த்தெறிந்த ராஜமவுலி! ஜப்பானில் ‘முத்து’வை முந்தியது ஆர்.ஆர்.ஆர்
ஜப்பானில் ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் 24 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது.
இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பானில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதற்கு காரணம் அவர் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம் தான். இப்படம் ஜப்பானில் ரிலீசாகி அங்கு வசூலையும் வாரிக்குவித்தது. அந்த சமயத்திலேயே ரூ.23.5 கோடி வசூலித்து இருந்தது இப்படம்.
ஜப்பானில் வெளியாகி அதிக வசூல் ஈட்டிய படமாகவும் முத்து இருந்து வந்தது. இதன் பின் பல்வேறு இந்திய நடிகர்களின் படங்கள் ஜப்பானில் ரிலீசான போதிலும் முத்து படத்தின் சாதனையை முறியடிக்கவில்லை. அந்த அளவுக்கு ஜப்பானில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருந்தார் ரஜினி.
இதையும் படியுங்கள்... எனது சகோதரனின் பயணம் இன்று முடிந்து விட்டது - பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி: குஷ்பு டுவீட்!
இந்நிலையில், தற்போது ரஜினியின் முத்து படம் 24 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) திரைப்படம் தான் ரஜினியின் முத்து பட சாதனையை முறியடித்து உள்ளது.
இதன்மூலம் ஜப்பானில் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்கிற சாதனையை ஆர்.ஆர்.ஆர் படைத்துள்ளது. முத்து படம் ஜப்பானில் 23.5 கோடி வசூலித்து இருந்த நிலையில், ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.24 கோடி வசூலித்து அந்த சாதனையை முறியடித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... விபத்தில் முதல் மனைவியை இழந்த சோகம்! நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்