எனது சகோதரனின் பயணம் இன்று முடிந்து விட்டது - பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி: குஷ்பு டுவீட்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை குஷ்புவின் சகோதரன் அபுபக்கர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

Khushbu brother Abu Bakker passed away today

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சரத்குமார், ராமராஜன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சினிமா ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். எனினும், தொலைக்காட்சி, அரசியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

விபத்தில் முதல் மனைவியை இழந்த சோகம்! நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதாவது, தனது அண்ணனுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று தான் அவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார்.

As much as you want your loved ones to be with you forever,time comes to say goodbye. My brother's journey has ended today. His love & guidance will always be us. I thank everyone who have prayed for him. As they say,the journey of life is decided by God. Rest in peace #Bhaijaan. pic.twitter.com/Ryh0AsaZRC

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குஷ்புவின் அண்ணனான அபுபக்கர் காலமானார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், உங்களது அன்புக்குரியவர்கள் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவிற்கு அவர்கள் விடைபெறும் நேரமும் வரும். எனது சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவரது அன்பும், வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. வாழ்க்கையின் பயணமானது கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்று வருத்தத்துடன் குஷ்பு பதிவிட்டுள்ளார்.

அமைச்சரான பின்... துணிவுடன் வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமையையும் தட்டித்தூக்கி அதிரடி காட்டும் உதயநிதி ஸ்டாலின்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios