விபத்தில் முதல் மனைவியை இழந்த சோகம்! நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்
எப்போதும் நகைச்சுவையாக பேசி மக்களை சிரிக்கவைத்துக் கொண்டிருந்தாலும், மதுரை முத்துவின் சொந்த வாழ்க்கை சோகங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்துள்ளது.
சின்னத்திரை பிரபலங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. குறிப்பாக சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் வயிறுவலிக்க சிரிக்க வைத்தவர்களை எளிதில் மறந்துவிட முடியாது. அந்த வகையில் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நகைச்சுவை மன்னனாக வலம் வருபவர் மதுரை முத்து.
ஸ்டாண்ட் அப் காமெடியில் கில்லாடியான இவர், தற்போது காலத்துக்கு ஏற்றார் போல் தன்னை அப்கிரேட் செய்து கொண்டு அடிக்கும் புராபர்டி காமெடிகள் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளன. இவ்வாறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி செய்வது, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தொடர்ந்து பிசியாக உள்ளார் மதுரை முத்து.
இவர் எப்போதும் நகைச்சுவையாக பேசி மக்களை சிரிக்கவைத்துக் கொண்டிருந்தாலும், இவரின் வாழ்க்கை சோகங்கள் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. இவர் மதுரையை சேர்ந்தவர், இவரது முதல் மனைவி பெயர் லேகா. லேகாவுக்கு திருமணமான ஒரு மாதத்தில் அவரது கணவர் அவரைவிட்டு ஓடிவிட்டாராம். அப்போது வயிற்றில் குழந்தையோடு லேகா கஷ்டப்படுவதை பார்த்து தான் அவரை கல்யாணம் பண்ணிக்கொண்டாராம் முத்து.
இதையும் படியுங்கள்... அமைச்சரான பின்... துணிவுடன் வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமையையும் தட்டித்தூக்கி அதிரடி காட்டும் உதயநிதி ஸ்டாலின்
திருமணமாகி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். முத்து ஒரு முறை விபத்தில் சிக்கியபோது அவர் குணமடைய வேண்டி அவருக்காக கடவுளிடம் வேண்டி மொட்டையெல்லாம் அடித்துக் கொண்டாராம் லேகா. அந்த அளவுக்கு பாசமாக இருந்து வந்த லேகா கடந்த 2016-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டாராம்.
மனைவியின் மறைவுக்கு பின் மனமுடைந்து போன முத்து, தன் குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக தனது 32 வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாராம். தன் முதல் மனைவியின் தோழியான ரீத்து என்கிற பல் மருத்துவரை தான் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாராம். இவ்வாறு பேட்டி ஒன்றில் தன் முதல் மனைவி குறித்து மதுரை முத்து கண்கலங்கியபடி பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ராம்சரண் முதல் பிரபாஸ் வரை... வாரிசு படத்தின் கதை கேட்டு நடிக்க மறுத்த முன்னணி தெலுங்கு ஹீரோஸ் - காரணம் என்ன?