MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விபத்தில் சிக்கிய 'இனியா' சீரியல் நடிகை ஆல்யா மானசா! கால் எலும்பு முறிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

விபத்தில் சிக்கிய 'இனியா' சீரியல் நடிகை ஆல்யா மானசா! கால் எலும்பு முறிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'இனியா' சீரியலில் கதாநாயகியாக நடித்த வரும் நடிகை ஆல்யா மானசா, திடீரென சாலை விபத்தில் சிக்கி அதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 10 2023, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில், செம்பா என்கிற கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும்,  தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் ஆல்யா மானசா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த, சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து இவர்கள் இருவரும் சீரியலில் கவனம் செலுத்தி வந்தனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் திடீர் சந்திப்பு!

37

அந்த வகையில் ஆல்யா மானசா தன்னுடையாக மகள் ஐலாவை பெற்றெடுத்த பின்னர், விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்தார். சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக ஆல்யா மானசா கர்ப்பமாக ஆனதால், அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

47

தற்போது இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர், ஆறு மாதம் கழித்து மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். குழந்தை பெற்ற பின் உடல் எடை கூடியிருந்த ஆல்யா மானசா தீவிர உடல் பயிற்சி மற்றும் டயட்டுக்கு பின்னர் கணிசமாக தன்னுடைய உடல் எடையை ககுறித்துள்ளார்.

மயோசிட்டிஸ் பிரச்சனையால் சமந்தாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்! படவிழாவிற்கு கையில் ஜெபமாலையுடன் வந்த புகைப்படங்க
 

57

மேலும் தற்போது சன் டிவியில் நடிகர் ரிஷிக்கு ஜோடியாக, 'இனியா' என்ற சீரியலில் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் கொண்ட ஒருவர், சுதந்திரமாக முடிவெடுக்க கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அந்த பெண்ணையும் அடக்கி ஆள நினைக்கிறார். இதனை எப்படி இனியா சமாளிப்பார் என்பதை, மையமாக வைத்து இந்த சீரியல் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி,  டிஆர்பி-யில் மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது.
 

67

இந்த சீரியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த ஆல்யா மானஸாவிற்கு, யாரும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.  காலில் அடிபட்டு பெரிய கட்டோடு ஹாஸ்பிடல் இருந்தபடி வீடியோ வெளியிட்டு மிகவும் உருக்கமான இவர் பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்று யோகா செய்யும் 'துணிவு' பட நடிகரின் மனைவி நடிகை பூஜா! வைரல் வீடியோ..!

77

இந்த வீடியோவில் நான் எதிர்பாக்காத ஒன்று என்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளது. என்னுடைய கால்கள் பிராக்சர் ஆகி உள்ளன. எனவே தன்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எனக்காக வேண்டிக் கொள்ளும் படி கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் விரைவில் இவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!
Recommended image2
Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!
Recommended image3
Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved