MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மயோசிட்டிஸ் பிரச்சனையால் சமந்தாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்! படவிழாவிற்கு கையில் ஜெபமாலையுடன் வந்த புகைப்படங்க

மயோசிட்டிஸ் பிரச்சனையால் சமந்தாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்! படவிழாவிற்கு கையில் ஜெபமாலையுடன் வந்த புகைப்படங்க

நடிகை சமந்தா நடித்துள்ள 'சகுந்தலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்த நிலையில், படவிழாவிற்கு வந்த சமந்தா... கையில் பக்தி பரவசத்தோடு ஜெப மாலை வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 09 2023, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில், விஜய், விக்ரம், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு, அவருடைய குடும்பத்தினரும் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு, திடீரென தன்னுடைய காதல் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

27

விவாகரத்துக்கு பின்னர், சமந்தா தன்னுடைய முழு கவனத்தையும் மீண்டும் சினிமாவில் செலுத்த துவங்கினார். அந்த வகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே, அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதை போல் சில பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் சமந்தாவை நடிக்க வைக்க, பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வயிற்றில் குழந்தையுடன் தலைகீழாக நின்று யோகா செய்யும் 'துணிவு' பட நடிகரின் மனைவி நடிகை பூஜா! வைரல் வீடியோ..!

37

சமீபத்தில் கூட சமந்தா கதையின் நாயகியாக நடித்த 'யசோதா' படம் வெளியான போது, இப்படத்தின்  பிரமோஷன் பணிகளில் கூட கலந்து கொள்ளாத சமந்தா, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஒரே ஒரு பேட்டி மட்டுமே கொடுத்தார். மேலும் அதற்கு முன்னதாக தான் மயோசிட்டிஸ் பிரச்சனையால்  பாதிக்கப்பட்டதாக கூறியது இவரது ரசிகர்களை மட்டுமின்றி, திரையுலகை செய்தவர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

47

விரைவில் சமந்தா இந்த அரியவகை தசை அழிச்சி பிரச்சனையில் இருந்து பத்திரமாக மீண்டு வர வேண்டும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக எவ்வித படபிடிப்பிலும் கலந்து கொள்ளாமல், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் சமந்தா நடிப்பில் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளது சகுத்தலம் திரைப்படம்.

டைட்டில் வெல்ல தகுதியே இல்லை! ஆப்பு வைத்த ஹவுஸ் மேட்ஸ்.. கலங்கி நின்ற அசீமை ஒரே வார்த்தையில் காலி செய்த ஏடிகே!

57

புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், 'சகுந்தலம்' என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்த பட விழாவில் கலந்து கொள்வதற்காக சமந்தா மும்பை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வந்த போது ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

67

இதை தொடர்ந்து, இன்று நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்... இன்று ஹைதராபாத்தில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சமந்தா, வெள்ளை நிற சேலையில் கையில் ஜெப மாலை உடன் காணப்பட்டார். இது, மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு பின்னர் இவரிடம், ஏற்பட்ட திடீர் மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

சல்வார் அழகில்... சிரிப்பால் ரசிகர்களை சுழட்டி போடும் பிரியா பவானி ஷங்கர்! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!

77

மேலும் இந்த பட விழாவில், இயக்குனர் சமந்தாவை பாராட்டி பேசிய போது மிகவும் எமோஷனலான சமந்தா அங்கேயே கண்ணீர் விட்டு அழுதது பலரையும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருக வைத்தது. அதே போல் இந்த பட விழாவில் பேசிய சமந்தா, இந்த தருணத்திற்காக பல நாட்கள் காத்திருந்ததாகவும் அனைவரும் எதிர்பார்த்தபடி படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அப்படிதான் 'சகுந்தலம்'  படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும், சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை. என மிகவும் உருக்கமாக மன வலியுடன் சமந்தா பேசியுள்ளார். மேலும் இந்த பட விழா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved