ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்தம்போட்டு கத்திய நயன்தாரா... சவுண்டு கேட்டு ஜெர்க் ஆன ராதிகா - நயன் இவ்ளோ டெரரானவரா!
ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கத்தியதை கேட்டு நானே ஜெர்க் ஆகிவிட்டேன் என நடிகை ராதிகா தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக சுஹாசினி தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் இரட்டைக் குழந்தைகளும் பிறந்தது. வாடகைத் தாய் மூலம் அவர்கள் அந்த குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநில் N சிவன் என்றும் உலக் தெய்விக் N சிவன் என்றும் தமிழ், பெங்காலி கலந்து பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் விருது நிகழ்ச்சியின் போது தான் குழந்தையின் பெயரை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.
நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது நானும் ரெளடி தான் படத்தின் போது தான். அந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கி இருந்தார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நயன்தாரா மீது காதல் மலர்ந்தது எப்போது என்பது குறித்து நடிகை சுஹாசினி மணிரத்னம் நடத்திய நேர்காணலில் மனம்விட்டு பேசி இருந்தார் விக்னேஷ் சிவன். அதன்படி நானும் ரெளடி தான் படத்தின் இரண்டாவது ஷெட்யூலின் போது தான் தாங்கள் டேட்டிங் செய்ய தொடங்கியதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... மேலும் உடல் எடை குறைந்து... எலும்பும் தோலுமாய் மாறிய ரோபோ சங்கர் - லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
அந்த படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா கேரக்டரில் ராதிகா நடித்திருப்பார். தன் சொந்த அம்மாவின் கேரக்டரை வைத்து தான் ராதிகா ரோலை உருவாக்கியதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த கேரக்டருக்கு தன் தாயின் பெயரான மீனாக்குமாரி என்பதை சூட்டியதையும் அந்த பேட்டியில் கூறி இருந்தார் விக்கி. அதோடு ஷூட்டிங்கில் ராதிகாவுக்கு தெரியாமலே தானும் நயனும் காதலித்து வந்ததாக விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.
அதோடு நானும் ரெளடி தான், ஷூட்டிங்கின் போது நயன்தாரா சைலன்ஸ் என கத்தியதை கேட்டு, என்ன இந்த பொண்ணு சைலன்ஸ் லாம் சொல்றா சத்தமா, திடீர்னு கேட்டு ஜெர்க் ஆனதாக ராதிகா தன்னிடம் சொன்னதாகவும், நிஜமாகவே நயன்தாரா டெரரான ஆள் தானா என சுஹாசினி கேட்டதற்கு, சிரித்தபடி ஆமாம் என சொன்ன விக்னேஷ் சிவன். நயன்தாரா எவ்வாறு கத்தினார் என்பதை சொல்லிக் காண்பித்தார். அதுமட்டுமின்றி நான் தான் இந்த மாதிரி கத்துவேன், என்னவிட ஜாஸ்தி கத்துறா இந்த பொண்ணு, நிஜமாவே என்னவிட டெரரா இருப்பா போல என நயன்தாரா பற்றி ராதிகா தன்னிடம் வியந்து பேசியதாகவும் சுஹாசினி அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... தமிழ் புத்தாண்டில் புது கார் வாங்கிய பிக்பாஸ் ரச்சிதா... அதன் விலை மட்டும் இத்தனை லட்சமா!