புது கார் வாங்கிய ஜோரில்.! கார் மேல் படுத்து வளைய வளைய போஸ் கொடுத்த பிக்பாஸ் ரக்ஷிதா!
பிக்பாஸ் ரக்ஷிதா புதிய கார் வாங்கியுள்ள நிலையில்... அதில் மேல படுத்தபடி, வளைய வளைய போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
சீரியலில் நாயகி ரக்ஷிதா:
பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா மஹாலக்ஷ்மி கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமான பின்னரே தமிழ் சீரியல்களில் வாய்ப்பை கைப்பற்றினார்.
பிரிவோம் சந்திப்போம்:
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் ரக்ஷிதா ப்ளாக் மேக்கப் போட்டு நடித்தார். அதாவது தன்னை கருமையாக வெளிகாட்டிக்கொண்டு நடித்தார்.
இது செல்ஃபி டைம்.. கிழிந்த உடையில் கிளுகிளுப்பேற்றும் மாளவிகா மோகனன்!
பத்தி கொண்ட காதல்:
இந்த சீரியலில் நடித்த போது, அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் கோபாலகிருஷ்ணனுக்கும் இவருக்கும் காதல் பற்றிக்கொண்டதோடு திருமணத்திலும் முடிந்தது.
திருமணத்திற்கு பிறகும் சீரியல்:
திருமணம் ஆன பின்பும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இவர் நடித்த சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
திரைப்பட வாய்ப்பு:
சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து வியர்ந்த மொழி பட இயக்குனர் ராதா மோகன் 'உப்புக்கருவாடு' படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தை வழங்கினார்.
தோல்வியால் கவனம் இழந்த ரக்ஷிதா:
இந்த படம் தோல்வியடைந்ததால், சின்னத்திரையில் வரவேற்பை பெற்றது போல், வெள்ளித்திரையில் இவரால் ஜொலிக்க முடியவில்லை.
மணமுறிவு:
சமீப காலமாகவே கணவர் தினேஷுடனான கருத்து வேறுபாடு காரணமாக, ரக்ஷிதா பிரிந்தே வாழ்ந்து வருகிறார். தினேஷ் இவருடன் இணைந்து வாழ ஆசைப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ரக்ஷிதா இல்லை.
பிக்பாஸ் என்ட்ரி:
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அதிரடியாக என்ட்ரி கொடுத்து அசால்டாக விளையாடி வந்தார் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. ஆனால் கடைசி நாட்களில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறினார்.
புது கார்:
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரக்ஷிதா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
வளைய வளைய போஸ்:
புது கார் வாங்கிய ஜோரில், காரில் மேல் படுத்தபடியும், காரின் அருகே நின்று கொண்டும் இவர் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அடடா... படிப்பிலும் நடிகை தேவயானி பொண்ணு சமத்து தான்! +2 மதிப்பெண் குறித்து வெளியான தகவல்!