- Home
- Cinema
- Top 10 Movies : புஷ்பா 2 முதல் டாக்ஸிக் வரை... முதல் நாள் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்!
Top 10 Movies : புஷ்பா 2 முதல் டாக்ஸிக் வரை... முதல் நாள் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்!
Top 10 Movies with Highest Opening Day Collections : இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த டாப் 10 படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். இந்த பட்டியலில் யாஷின் டாக்ஸிக் படமும் இடம்பெற்றுள்ளது.

முதல் நாளில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்
இந்திய சினிமாவில் பான்-இந்தியா ட்ரெண்ட் தொடங்கிய பிறகு, படங்கள் பிரம்மாண்டமாக வெளியாகின்றன. ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் நாடு முழுவதும் ரிலீஸ் ஆகின்றன. இதில் முதல் நாள் வசூலில் டாப் 10 பட்டியலில் அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம்சரண் ஆகியோரின் படங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு அடுத்த இடங்களில் பாலிவுட் மற்றும் கோலிவுட் நாயகர்களின் படங்கள் உள்ளன. யாஷ் நடித்த இரண்டு படங்களும் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
1. புஷ்பா 2
2. துரந்தர் 2
3. ஆர்ஆர்ஆர் (RRR)
4. பாகுபலி 2
முதல் நாள் வசூல் பட்டியலில் 'பாகுபலி 2' நான்காவது இடத்தில் உள்ளது. 2017-ல் வெளியான இது, 'பாகுபலி' முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகம் மெகா ஹிட் ஆனதால், இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், முதல் நாளில் ரூ.217 கோடி வசூலித்தது. இந்தப் படத்தையும் ராஜமௌலியே இயக்கியது குறிப்பிடத்தக்கது.
5. கல்கி 2898 ஏடி
6. சலார்
7. கேஜிஎஃப் 2 (KGF 2)
8. ஓஜி (OG)
எட்டாவது இடத்தில் பவன் கல்யாணின் 'OG' படம் உள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். இப்படம் முதல் நாளிலேயே ரூ.155 கோடி வசூலித்ததாக படக்குழுவே போஸ்டரில் அறிவித்திருந்தது.
9. கூலி
ஒன்பதாவது இடத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' உள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில், நாகார்ஜுனா வில்லனாகவும், அமீர் கான் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம், முதல் நாளில் ரூ.151 கோடி வசூலித்தது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
10. டாக்ஸிக் (Toxic)
'டாக்ஸிக்' திரைப்படம் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், முதல் நாளில் ரூ.150 கோடி வசூலித்துள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். மொத்தத்தில், இந்த டாப் 10 பட்டியலில் ரஜினிகாந்தின் கூலி தவிர வேறு எந்த தமிழ்படமும் இடம்பெறவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

