- Home
- Cinema
- பிளான் ரெடி... ஜம்முனு கொண்டாட போறோம் - ஹனிமூன் ட்ரிப் குறித்து மனம்திறந்த ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி
பிளான் ரெடி... ஜம்முனு கொண்டாட போறோம் - ஹனிமூன் ட்ரிப் குறித்து மனம்திறந்த ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி
Ravindar Mahalakshmi : தயாரிப்பாளர் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி ஹனிமூன் கொண்டாட எங்கு செல்ல உள்ளார்கள் என்பதை அவர்களே சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளனர்.

லிப்ரா புரடக்ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். கடந்த சின தினங்களாகவே தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக இருப்பதே இவரது திருமணம் தான். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.
இவர்களின் திடீர் திருமணம் சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாகவே மாறியது. அதுமட்டுமின்றி இவர்களது திருமணத்தை ஏராளமானோர் ட்ரோல் செய்தும் வந்தனர். பணத்திற்கு ஆசைப்பட்டு தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து ஜோடியாக பேட்டி அளித்து இதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வருகிறது இந்த ஜோடி.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் ஹீரோ போல் மிரட்டலான லுக்கில் சூர்யா... 3டி-யில் உருவாகும் ‘சூர்யா 42’ - வைரலாகும் மோஷன் போஸ்டர்
புதிதாக கல்யாணம் ஆன ஜோடிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுவும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டால் அவர் வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடுவார்கள், சமீபத்தில் விக்கி - நயன் ஜோடி கூட தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஹனிமூன் கொண்டாடினர். இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியும் எங்கு ஹனிமூன் செல்ல உள்ளார்கள் என்பதை சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளனர்.
அதன்படி அவர்கள் இருவரும் ஐரோப்பா அல்லது லண்டனில் ஹனிமூன் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுவும் இப்போது இல்லையாம் நவம்பர் மாதத்தில் தானாம். அதற்கு முன் அடுத்த மாதம் தல தீபாவளி வருவதால் அதனை ஜம்முனு கொண்டாடிவிட்டு ஜாலியாக இருவரும் ஹனிமூன் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... சீசன் 6-லும் விஜய் டிவி பிரபலங்களை அதிகளவில் களமிறக்கும் பிக்பாஸ்... 10 பெண் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.