Suriya 42 : சிறுத்தை சிவா இயக்கத்தில் யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வரும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இருவரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவர் இசையில் கடைசியாக வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் இப்படத்தின் இசைமீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இதையும் படியுங்கள்... ரீ-ரிலீசாகி ஹவுஸ்புல் ஆன 3... தமிழில் பிளாப் ஆன தனுஷின் படத்துக்கு தெலுங்கில் இப்படி ஒரு வரவேற்பா?

Suriya 42 - Motion Poster | Suriya | Siva | Devi Sri Prasad | Studio Green | UV Creations

சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்தி வருகின்றனர். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. வெற்றி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் 3டி-யில் உருவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள படக்குழு, இப்படத்தை மொத்தம் 10 மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும் போது ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... சீசன் 6-லும் விஜய் டிவி பிரபலங்களை அதிகளவில் களமிறக்கும் பிக்பாஸ்... 10 பெண் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ