MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரீ-ரிலீசாகி ஹவுஸ்புல் ஆன 3... தமிழில் பிளாப் ஆன தனுஷின் படத்துக்கு தெலுங்கில் இப்படி ஒரு மாஸான வரவேற்பா?

ரீ-ரிலீசாகி ஹவுஸ்புல் ஆன 3... தமிழில் பிளாப் ஆன தனுஷின் படத்துக்கு தெலுங்கில் இப்படி ஒரு மாஸான வரவேற்பா?

Dhanush : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் ஆகி அங்கு அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Sep 09 2022, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் 3. தனுஷ் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், அறிமுகமானதே இப்படத்தின் மூலம் தான். குறிப்பாக இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் ஹிட் ஆனது.

24

ரிலீசுக்கு முன் பாடல்கள் ஹிட் ஆனதால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீசானது. ஆனால் திரைக்கதை சுமாராக இருந்ததன் காரணமாக இப்படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியை தழுவியது. இந்நிலையில், அப்படத்துக்கு தற்போது திடீரென மவுசு அதிகரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... ஒரே வாரத்தில் திரையரங்கில் இருந்து வாஷ் அவுட்டான 'கோப்ரா'..! பட்ஜட்டில் பாதி கூட வசூல் செய்யவில்லையா?

34

அதுவும் தமிழ்நாட்டில் இல்லை ஆந்திராவில் தான் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அப்படி ரிலீசான படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறதாம். அங்கு இப்படத்தின் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகி ஓடி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

44

இதனால் தனுஷ் மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம். ஏனெனில் அவர் தெலுங்கில் முதன்முறையாக நடித்துள்ள வாத்தி திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. 11 வருடங்களுக்கு முன் நடித்த 3 படத்துக்கே இப்படி ஒரு அமோக வரவேற்பு கிடைத்தால், வாத்திக்கு இதைவிட டபுள் மடங்கு ரெஸ்பான்ஸ் இருக்கும் என தனுஷ் நம்பிக்கையில் உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தீவிரவாதி...கொந்தளிக்கும் பாரதி ...என்ன செய்ய போகிறார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அனிருத் ரவிச்சந்தர்
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved