குட்டியோடு கியூட் ஸ்மைல போட்டு சாச்சிபுட்டாளே... கருப்பு சேலையில் இருக்கும் பிரியா பவானி ஷங்கரின் ஹாட் போஸ்!
நடிகை பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பார்த்து, ரசிக்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில்... அதுவும் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சீரியலில் நுழைந்து, வெள்ளித்திரையில் எடுத்ததுமே ஹீரோயின் வாய்ப்பை பெற்று, தனக்கான வளர்ச்சியை தக்க வைத்து கொண்டவர் தான் பிரியா பவானி ஷங்கர்.
இவரின் அசுர வளர்ச்சிக்கு காரணம், ஒரு புறம் திறமை என்றாலும்... திரையுலகில் தொட்டதெல்லாம் துலங்க ஒரு அதிர்ஷ்டமும் வேண்டும்.
காரணம் வளர்ந்து வரும் நேரத்தில், ஒரு படம் தோல்வியாக அமைந்தாலும்... அந்த நடிகையை தூக்கி ஓரம் கட்டிவிட்டு, அடுத்தடுத்து புது புது ஹீரோயின்களுக்கு வலைவீச துவங்கி விடுவார்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.
அந்த விதத்தில் பிரியா பவானி ஷங்கர் மிகவும் அதிஷ்டக்கார புள்ளை தான். இவர் ஹீரோயினாக அறிமுகமான, மேயாத மான் திரைப்படம், விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதி வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து இவர் நடித்து வெளியான, கடைக்குட்டி சிங்கம் , மாஃபியா, யானை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இவரை முன்னணி ஹீரோயின் லிஸ்டிலும் இடம்பெற வைத்துள்ளது.
அதற்கேற்றாப்போல் அம்மனையும் சமீப காலமாக, இளம் ஹீரோக்கள் படங்களை விட, ராகவா லாரன்ஸ், ஜெயம் ரவி, போன்ற முன்னணி நடிகர்கள் படங்களையே குறி வைத்து கமிட் ஆகி நடிக்கிறார்.
மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து, இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்... இவர் ருத்ரன் படவிழாவிற்கு வந்த கருப்பு சேலையோடு, ரசிகர்களை மயக்கும் விதமாக எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.