போதை தலைக்கேறி... வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்! கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஓவர் அலப்பறை!
நடிகை ஐஸ்வர்யா ராய் குடி போதை தலைக்கேறி, கட்டிப்பிடித்து... முத்தம் கொடுத்து, அலப்பறை செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
உலக அழகியாக முடி சூடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தாலும், இவரை முதல் முதலில் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல தமிழ் பட இயக்குனரான, மணிரத்னம் தான். 1997 ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இவர் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய்.
பல்வேறு எதிர்ப்புகளை கடந்து இப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் போனது. மேலும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய முதல் படத்திலேயே, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், தன்னுடைய அழகாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்ட ஐஸ்வர்யா ராய்... தொடர்ந்து ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் என அனைத்து ஸ்டார் நடிகர்களுடனும் நடித்து பிரபலமானார்.
முன்னணி நடிகையாக மாறிய பின்னர் சில காதல், சமாச்சாரங்களிலும் சிக்கி சர்ச்சைகளுக்கு ஆளானார் ஐஸ்வர்யா ராய். அதிலும் குறிப்பாக திரையுலகில் அறிமுகமான இரண்டு, மூன்று வருடங்களிலேயே... பிரபல நடிகர் சல்மான் கானுடன் டேட்டிங் செய்தார். இவர்கள் இருவரின் உறவு திருமணம்வரை சென்ற நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி இது? கொசுவலையை போன்ற உடையில் சிண்ட்ரெல்லா பொம்மை போல் கியூட் போஸ்!
ஒருவழியாக காதல் தோல்வியில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய், 'குரு' படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்தார். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிகளுக்கு 11 வயதில் ஆராத்யா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்னரும் கதாநாயகவே நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் மிகவும் தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில நாட்களில் (ஏப்ரல் 28) ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் ஒரு புறம் படு தூளாக நடந்து கொண்டுள்ளது.
குறையாத கலெக்ஷன்..! 8 நாட்களில் பத்து தல-யை பந்தாடிய 'விடுதலை'..! வசூல் விவரம் இதோ..
இது ஒருபுறம் இருக்க, நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் போதை தலைக்கேறிய நிலையில் நிற்க கூட நிதானமின்றி... கட்டி பிடித்து, முத்தம் கொடுத்து... ஆட்டம் போட்ட பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு ஐஸ்வர்யா ராயா இப்படி? அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ ஈஷா அம்பானியின் சங்கீத் நிகழ்ச்சி பார்ட்டியின் போது, எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
அந்த வீடியோ இதோ...