குறையாத கலெக்ஷன்..! 8 நாட்களில் பத்து தல-யை பந்தாடிய 'விடுதலை'..! வசூல் விவரம் இதோ..
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், வெளியான 'விடுதலை' திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து பல திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருவதோடு, வசூலும் அதிகரிக்க துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ் படமான 'பத்து தல' படத்துடன், மோதியது சூரியின் நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய கிளாஸ் படமான 'விடுதலை'. சில சமயங்களில் மாஸ் படங்களை காப்பாற்ற, ரசிகர்கள் என்னதான் முட்டு கொடுத்து, ஓடவைத்தாலும்... ஒரு கட்டத்திற்கு அது முடிவதில்லை.
அப்படி தான் விடுதலை படத்திற்கு ஒரு நாள் முன்பு வெளியாகி, திரையரங்குகளில் மாஸ் காட்டிய சிம்புவின் 'பத்து தல' படம், இரண்டாவது வாரத்தில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு, விடுதலை படத்திற்கான காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
கீழடி அருங்காட்சியகத்தின் முன்பு திடீர் என போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு! ஏன் தெரியுமா?
காரணம் 'விடுதலை' படத்திற்கான வரவேற்பும், வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், கடந்த 8 நாட்களில், இந்தியாவில் மட்டும் 'விடுதலை' சுமார் 23 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்கள் வருவதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அதே போல் பத்து தல திரைப்படம் இந்தியாவில் மட்டும் ஒரு வாரத்தில் 20 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாகவும். இப்படத்திற்கு வரும் ரசிகர்கள் கூட்டம் குறைந்து , திரையரங்குகள் காலியாக காட்சியளிப்பதால், இந்த வாரம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும், ஆகஸ்ட் 16, 1947 திரைப்படமும் விடுதலை படமும் தான் திரையரங்குகளில் ஓடிவருகிறது .
குறிப்பாக, விடுதலை படத்தின் மேக்கிங் நாயகன் வெற்றி மாறனின் வெற்றி ஓசை தான் சற்று உரைத்து குரலில் ஒளித்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக படக்குழு மெனக்கெட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் 2 வாரம் அல்ல 2 மாதம் கூட விடுதலை திரைப்படம் ஓடும் என பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம்... ஒரே மாதிரியான கதைக்களம் என்பதை கடந்து, மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதைகள் மூலம், தன் திரைப்படங்களின் வழியே குறிப்பிட்ட வட்டத்தை சேர்ந்த மக்களின் துன்பங்களையும், அதே வட்டத்தினுள் உள்ள தீயோரையும் திரையிட்டுக் காட்டுவது தான். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் முன்னும் மூன்று அல்லது 4 மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.