கீழடி அருங்காட்சியகத்தின் முன்பு திடீர் என போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு! ஏன் தெரியுமா?

சமீபத்தில் தான் நடிகர் சூர்யா குடும்பத்தினருக்காக, கீழடி அருங்காட்சியகத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி, ஒரு பரபரப்பு எழுந்து, ஓய்ந்த நிலையில்... திடீர் என இயக்குனர் பேரரசு, அருங்காட்சியகத்தின் முன்பு போராட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

famous  director perarasu suddenly protest in keezhadi museum

கீழடியில், நம் பண்டை தமிழ் மூதாதையர்கள் பயன்படுத்திய பொருட்கள்,அவர்கள் ஆண்ட பாத்திரங்கள், உபயோகித்த ஆயுதங்கள், அணிகலன்கள் போன்றவை மக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

நம் முன்னோர்களின் நாகரீக வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள, தமிழர்களை தாண்டி வெளிநாட்டவர்களும் ஆர்வம் காட்டுவதால், சமீப காலமாக மக்கள் அதிக அளவில் கீழடிக்கு சென்று, அதனை பார்வையிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இயக்குனர் பேரரசு கீழடிக்கு சென்று உள்ளார். அருங்காட்சியகம் நுழைவு வாயிலின் முன்பு, வெள்ளிக்கிழமை விடுமுறை என்று மாற்றப்பட்டிருந்தது. 

famous  director perarasu suddenly protest in keezhadi museum

பொதுவாக அருங்காட்சியகம், விடுமுறை நாட்களில் தான் இயங்காது என நினைக்கும் மக்கள் பலர், வெள்ளிக்கிழமை விடுமுறை என்று தெரியாமல். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்தோடு சென்றுள்ளனர். அதிலும் முதல் வார வெள்ளிக்கிழமை வரை மக்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல் முறையாக வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை என்று அறிவித்ததால், அதை அறியாமல்...ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஈரோடு, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சென்னை, திண்டுக்கல் என்று பல ஊர்களில் இருந்து மக்கள் வந்து குவிந்திருந்தனர். அது மட்டுமில்லாமல் பல பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளும் வந்திருக்கின்றனர்.

சும்மா பிண்ணிடீங்க வெற்றி..! 'விடுதலை' படம் பார்த்து பிரமித்து போய் பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!

மக்கள் எவ்வளவோ கேட்டும் அங்குள்ள அதிகாரிகள் மக்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இயக்குனர் பேரரசு அங்குள்ளவர்களிடம் பேசிப் பார்த்திருக்கிறார் அப்பொழுதும் அவர்கள் பிடிவாதமாக யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு பேரரசு மக்களை உள்ளே அனுமதிக்கும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் இன்று மக்கள் மத்தியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து விட்டார். இந்த நேரத்தில் இந்த பிரச்சனை அறிந்து மீடியாக்களும் அங்கு வந்து விட்டனர்.

famous  director perarasu suddenly protest in keezhadi museum

 மீடியாக்களிடம் பேசிய பேரரசு நிலைமையை மீடியாக்களிடம் தெரிவித்து ஞாயிறு விடுமுறை என்பது மட்டும் மக்களுக்கு அறிந்த ஒன்றாக இருக்கும், நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று யாரும் அறிந்திட மாட்டார்கள் மேலும் அன்றைய பேப்பரில் ஏப்ரல் 14 க்கு பின் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று வந்திருந்தது. இங்கு வரும் மக்கள் பேப்பரை பார்த்து செய்திகளை படித்துக் கொண்டு வருவதில்லை.வெள்ளிக்கிழமை விடுமுறை என்பது துபாய், அபுதாபி, சவுதி போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டும் இருப்பதாகும். நம் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை என்று காலங்காலமாக நடந்து வருகிறது. இந்த கீழடிக்கு வரும் மக்கள் தமிழ் உணர்வோடும், நம் மூதாதையர்கள் பயன்படுத்தி பொருட்களை பார்க்கும் ஆர்வத்தோடும் வருகிறார்கள் மேலும் மாணவ மாணவிகள் தான் அதிகமாக வருகிறார்கள். அவர்கள் விடுமுறை நாட்கள் தான் வர முடியும். மக்களும் விடுமுறை நாட்களில் தான் வந்து பார்க்க முடியும் இதில் ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று இவர்கள் விடுமுறை விட்டால் என்ன ஆவது? டாஸ்மாக்கில் கூட இங்கு  விடுமுறை நாள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் இந்த கீழடி ஆழ்வாராய்ச்சிக்கு ஏன் விடுமுறை என்று பல கேள்விகளை வைத்த பேரரசு அதே சமயம் எம்பி வெங்கடேசன் அவர்களை தொடர்பு கொண்டு இங்கு இருக்கும் சூழ்நிலையை விளக்க உடனே எம்பி வெங்கடேஷ் அவர்கள் அங்குள்ள அதிகாரிக்கு தொடர்பு கொண்டு மக்களை உள்ளே அனுமதிக்க ஆவன செய்தார்.

செவ்வந்தி சீரியல் நாயகி திவ்யா ஸ்ரீதருக்கு குழந்தை பிறந்தாச்சு! புகைப்படத்தோடு குட் நியூஸ் சொன்ன நடிகை!

famous  director perarasu suddenly protest in keezhadi museum

பேரரசும் எம்பி வெங்கடேசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் பேரரசு கீழடியில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios