வயிற்றில் குழந்தையோடு கொழுக்கு... மொழுக்குன்னு இருந்த ஸ்ரேயாவா இப்படி? ஆச்சர்யடுத்தும் ட்ரான்ஸ்பர்மேஷன்!
நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய கர்ப்பகால புகைப்படத்தையும், சமீபத்திய புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்சின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. 'உனக்கு 20 எனக்கு 18' திரைப்படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்த ஸ்ரேயா, ஹீரோயினாக முதல் முதலில் நடித்த திரைப்படம் மழை. கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இந்த படத்தில்... ஸ்ரேயா பாவாடை தாவணி அணிந்த கவர்ச்சி குயினாக தரிசனம் தந்து, ரசிகர்களை கவர்ந்தார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர். அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடிக்க துவங்கினர் ஸ்ரேயா.
அந்த வகையில் தனுஷுக்கு ஜோடியாக, 'திருவிளையாடல் ஆரம்பம்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக 'சிவாஜி', நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக 'கந்தசாமி', தளபதி விஜய்க்கு ஜோடியாக 'அழகிய தமிழ்மகன்' என அடுத்தடுத்த டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயா, மிக குறுகிய நாட்களில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இடம் பெற்றார்.
30 வயதை கடந்த பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், சுதாரித்துக் கொண்ட ஸ்ரேயா சட்டுபுட்டுன்னு தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரூ என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்த ஸ்ரேயா... கொரோனா காலகட்டத்தின் போது ஊர் உலகத்திற்கே தெரியாமல் அழகிய பெண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார்.
2021 ஆம் ஆண்டு ஸ்ரேயாவுக்கு குழந்தை பிறந்த நிலையில், இந்த தகவலை சுமார் பத்து மாதங்கள் கழித்து தான் வெளிப்படுத்தினார். இது ஸ்ரேயாவின் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னுடைய மகளுக்கு ராதா என பெயரிட்டுள்ள ஸ்ரேயா, குழந்தை பெற்ற பிறகும்... சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருவது மட்டுமின்றி, அவ்வப்போது கவர்ச்சி பொங்கும் விதமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்ரேயா, தன்னுடைய கர்ப்ப காலத்தில் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். காரணம் கர்ப்பமாக இருக்கும் போது, கொழுக்க மொழுக்குன்னு இருந்த ஸ்ரேயா, தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக மாறி உள்ளார். இவரது இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் தான்.. பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.