டுவிட்டரில் ‘ஆதித்த கரிகாலன்’ விக்ரம் உடன் சேர்ந்து ‘குந்தவை’ திரிஷா செய்த வேலையை பார்த்தீர்களா...!
Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 60 ஆண்டுகால போராட்டத்துக்கு பின் தற்போது திரை வடிவம் கண்டுள்ளது. பிரம்மாண்டமாக எடுத்து முடிக்கப்பட்ட இந்த கனவு திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது.
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனரான மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... தஞ்சை ப்ரோமோஷனுக்கு வருவதை ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் சொன்ன சீயான்
பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. அந்த வகையில், விரைவில் தஞ்சை பெரிய கோவிலில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதில் நடிகர் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், நடிகை திரிஷாவும், நடிகர் விக்ரமும் இப்படத்தை வித்தியாசமாக புரமோட் செய்யத் தொடங்கி உள்ளனர். அதன்படி இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தங்களுடைய பெயரை மாற்றி இருக்கிறார்கள். விக்ரம் ஆதித்த கரிகாலன் என்றும் திரிஷா குந்தவை என்றும் தங்களது பொன்னியின் செல்வன் பட கேரக்டர்களை பெயராக மாற்றி வித்தியாசமாக புரமோட் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் ‘அந்த’ அப்டேட் வந்தாச்சு