ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் ‘அந்த’ அப்டேட் வந்தாச்சு

Ponniyin selvan : பொன்னியின் செல்வன் பட பாடலின் லிரிக்கல் வீடியோ எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.

Ponniyin selvan movie Ratchasa Maamaney song lyric video release update

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, பார்த்திபன், ரகுமான், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்தினர். இதில் ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

இதையும் படியுங்கள்... பெண்களை கவரும் வண்ணங்களில் விற்பனைக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' பட்டு புடவைகள்! குவியும் ஆடர்கள்!

Ponniyin selvan movie Ratchasa Maamaney song lyric video release update

அதோடு அந்த விழாவில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. அந்த பிரம்மாண்ட டிரெய்லரைப் பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போகினர். அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியியான பாடல்களை அனைத்தும் மனதைக் கவரும் வகையில் அமைந்திருந்தன. இதனால் அப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த அந்த லிரிக்கல் வீடியோவை வெளியிட தயாராகி உள்ள படக்குழு, அதற்கான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் ‘ராட்சஸ மாமனே’ என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிரிக்கல் வீடியோ 5 மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... மணிரத்னம் அழைத்தும் பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்... என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios