தஞ்சை ப்ரோமோஷனுக்கு வருவதை ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் சொன்ன சீயான்
தஞ்சைக்கு பிரமோஷனுக்காக புறப்படும் டீம் குறித்து நடிகர் விக்ரம் தனது பதிவில் கரிகால சோழன் ஸ்டைலில் வரிகளை இயற்றி கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் விழா தடபுடலாக நடைபெற்ற வருகிறது முன்னதாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் மேடையில் நடைபெற்ற இந்த விழாவில் உலகநாயகன் கமலஹாசன், ரஜினிகாந்த், சங்கர் என நட்சத்திரங்கள் பலரும் குவிந்திருந்தனர். அவர்களது மேடைப் பேச்சுக்களும் வைரல் ஆனது. அதோடு படத்தின் நாயகர்கள், நாயகிகளின் பர்ஃபாமும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு...40-லும் குறையாத இளமை..குழந்தையுடன் பிகினி வீடியோக்களை தட்டிவிடும் ஸ்ரேயா
பிரமிக்கவைக்கும் காட்சிகளைக் கொண்ட இதன் ட்ரைலர் பின்னர் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றதோடு ,படத்தின் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியிருந்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து கட்டாயம் படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...தான் கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெண்பா இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு என தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். சோழ வரலாறான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரையான உள்ள இந்த படத்தின் விளம்பரங்கள் படுஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சைக்கு பிரமோஷனுக்காக புறப்படும் டீம் குறித்து நடிகர் விக்ரம் தனது பதிவில் கரிகால சோழன் ஸ்டைலில் வரிகளை இயற்றி கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...வாவ்..சிம்புவின் வெந்து தணிந்தது காடும் இவ்ளோ நீள படமா? வெளியானது புதிய அப்டேட்