வாவ்..சிம்புவின் வெந்து தணிந்தது காடும் இவ்ளோ நீள படமா? வெளியானது புதிய அப்டேட்
வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மாநாடு படத்தை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் கமலுக்கு பதிலாக தொகுப்பாளராக களம் இறங்கி இருந்தார் சிம்பு. தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய இரு படங்களிலும் பிசியாக உள்ளார். இதற்கிடையே தனது தந்தை டி ராஜேந்திரனின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று திரும்பிய இருந்த சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் திரையிடும் வேலைகள் விறுவிறுப்பாக ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்காக சிம்பு ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...மாயசேனாவாக சன்னி லியோன்.. தமிழ் கற்றுக் கொடுத்த இயக்குனர்
இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் வாசு தேவ் மேனன் - சிம்பு கூட்டணி அமைந்துள்ளது. கேங்க்ஸ்டார் கதைக்களத்தைக் கொண்டதாக கூறப்படும் இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் முதல் பாகம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் நாயகியாக சித்தி இத்னானி, நாயகனின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...ஆனந்தமாக இருப்பதற்கு அறிவாக இருக்கத் தேவையில்ல... மனங்களைக் கவர்ந்த நீயா? நானா? ஜோடி
இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். விரைவில் திரைக்கு வருவதால் இந்த படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதன்படி தணிக்கை சான்றிதழ் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.