வரலாற்று பின்னணிகள் அமைந்துள்ள இப்படத்திற்காக சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதோடு சன்னி லியோனுக்காகவே படப்பிடிப்பு முழுவதையும் மும்பையில் நடத்தியதாகவும் இயக்குனர் யுவன் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சிக்கடல் என பெயர் எடுத்த சன்னி லியோன் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இவர் ஹீரோயினியாக நடித்துள்ள படத்திற்கு ஓ மை கோஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், சதீஷ், தர்ஷா குப்தா, ரவி மரியா என பலர் நடித்துள்ளனர். ஆர்.யுவன் இயக்கியுள்ள இந்த படத்தை வா மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் - ஒய்ட் ஹார்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்தில் இடம் பெற்றிருப்பவர்களை வைத்து படம் கட்டாயம் திகில் கலந்த ஜனராக இருக்கும் என கூறப்படுகிறது. வழக்கமான சன்னி லியோனின் கவர்ச்சி கொஞ்சம் கூட குறையாமல் சமீபத்தில் வெளியான இதன் டீசரை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...ஆனந்தமாக இருப்பதற்கு அறிவாக இருக்கத் தேவையில்ல... மனங்களைக் கவர்ந்த நீயா? நானா? ஜோடி

இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் யுவன் அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. வரலாற்று பின்னணிகள் அமைந்துள்ள இப்படத்திற்காக சன்னி லியோனுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதோடு சன்னி லியோனுக்காகவே படப்பிடிப்பு முழுவதையும் மும்பையில் நடத்தியதாகவும் இயக்குனர் யுவன் தெரிவித்துள்ளார்.

ஆபாச பட வீடியோக்களால் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானார் சன்னி லியோன். அதோடு இவரை நாடு கடத்த வேண்டும் என்கிற அளவுக்கு மிகுந்த எதிர்ப்புகளையும் பெற்றவர். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் பின்னர் கவர்ச்சி படங்களில் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி , இந்திய திரையுலைகள் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை முன்னதாக தெரிவித்து இருந்தார். அதோடு தன்னுடன் நடிக்க திரையுலகில் சிலர் தயங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு....கணவரின் திருமணம் என தெரியாமல் ...சமையல் ஆர்டர் எடுத்த பாக்கியா..!

இதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த சன்னி லியோனுக்கு தற்போது தென் இந்திய சினிமா வாய்ப்புகள் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சினிமா உலகிற்குள் இவர் வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இயக்குனர் அனுராக்கிற்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார் சன்னி. சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பழக்கத்திற்காக ஆடிசன் செய்ய அனுமதித்த அனுராக் மற்றும் அவரது குழுவிற்கு நன்றி இது வாழ்க்கையை மாற்றும் சரியான தருணம்.. என் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...ஒருபக்க சேலையை சரியவிட்டு..கண்களை கவரும் சர்பேட்டா பரம்பரை நடிகை