கணவரின் திருமணம் என தெரியாமல் ...சமையல் ஆர்டர் எடுத்த பாக்கியா..!

தனது கணவன் இரண்டாவது திருமணம் என்று தெரியாமல் பாக்கியா உற்சாகமடைகிறாள். இனி நடக்கப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

vijay tv baakiyalakshmi serial today episode

தற்போது பாக்கியலட்சுமியில் கோபி தனது இரண்டாவது திருமணத்திற்காக தடபுடலாக ரெடியாகிக்கொண்டிருக்க, மறுபுறம் பாக்கியலட்சுமி தனக்கு மினி ஹால் ஆர்டரை தருவதாக மண்டப உரிமையாளர் தெரிவித்தது குறித்து மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்று அமிர்தாவுக்கு போன் செய்யும் எழில் ஏன் அப்பா அம்மா இருவரும் நான் செய்யும் காலை எடுக்கவில்லை என கேட்கிறார். அப்பா அம்மா கொஞ்ச நாளாவே சரியாவே இல்லை. அவர்கள் உன்னுடைய அப்பாவும் அம்மாவும் விவாகரத்து செய்தது குறித்து கவலையில் உள்ளார்கள் என தெரிவிக்க இதனால் மிகுந்த வருத்தமடையும் எல்லாத்துக்கும் காரணம் அப்பத்தான் என கூறி ஆத்திரமடைகிறார். 

பின்னர் ஏழில்,  என்மேல் உனக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா என அமிர்தாவிடம் கேட்க அதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக்கு நம்பிக்கை இருக்கிறது நான் சமாளித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கிறார் அமிர்தா.  கீழே வரும் எழிலிடம் செழியன் நீ நம்ம வீட்ல நடக்கிறது எல்லாத்தையும் அமுதாவிடம் கூறுகிறாயா? என கோபப்படுகிறார். இதனால் கடுப்பாண எழில், நீயும் வரவர அப்பா மாதிரியே ஆகிட்டு இருக்க எனக்கூறி சென்று விடுகிறார்.

மேலும் செய்திகளுக்கு...ஒருபக்க சேலையை சரியவிட்டு..கண்களை கவரும் சர்பேட்டா பரம்பரை நடிகை

vijay tv baakiyalakshmi serial today episode

மறுபுறம் தனது மறு கல்யாணம் குறித்து ராதிகாவிடம் பேசும் கோபி எனது கனவு நினைவாக போகிறது என உற்சாகத்தில் தெரிவிக்க ராதிகாவும் தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கிறார். இங்கு செழியனிடம் ஜெனி நான் வேலைக்கு போகிறேன் ஆண்டிக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என தெரிவிக்க அவங்க தானே சவால் விட்டாங்க அவங்களே பாத்துக்குவாங்க நீ வேலைக்கு எல்லாம் போகத் தேவையில்லை எனக்கு கூறுகிறார். இதை பாக்யாவிடம் ஜெனி கூற ஆன்ட்டி நான் வேலைக்கு போறேன் உங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் என்று தெரிவிக்க உடனே ஜெனியை கட்டி அணைக்கிறார் பாக்யா.

மேலும் செய்திகளுக்கு...ரஜினி, விஜய்-லாம் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையை படைத்த தனுஷ்... குவியும் வாழ்த்துக்கள்

இந்நிலையில் பாக்கியாவிற்கு ஆர்டர் கொடுப்பதாக கூறிய மண்டப ஓனரிடம் செல்லும் ராதிகாவின் அண்ணன் மற்றும் கோபி இருவரும் இரண்டாவது திருமணத்திற்காக தேதியை குறிப்பிட்டு மினி ஹால்  கேட்கின்றனர். அந்த தேதியில் பிரீயா இருப்பதாக கூறியஓனர் பாக்யாவிடம் ஆர்டருக்கு போன் செய்கிறார் தனது கணவன் இரண்டாவது திருமணம் என்று தெரியாமல் பாக்கியா உற்சாகமடைகிறாள். இனி நடக்கப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... நீயா நானா-வில் படிக்காத கணவனை ஏளனமாக பேசிய மனைவிக்கு ஆதரவாக குரல்கொடுத்த பிரபல கவிஞர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios