'பொன்னியின் செல்வன்' படத்தில்... முதலில் ஜெயராம் இந்த தோற்றத்தில் தான் நடிக்க இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆழ்வார்கடியனாக நடித்த ஜெயராம், தனக்கு முதலில் இந்த தோற்றத்தில் தான் நடிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்திருந்தார், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும் நடித்திருந்தனர்.
குந்தவையாக த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும்,முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாகும். மேலும் ஜெயராம் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக மணிரத்னம் என்னேரமும் அவர் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை கூட போட்டதாக தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகள்: 57 வயதில்... 23 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாரா நடிகர் பப்லு? வைரலாகும் தகவல்!
மேலும் இது ஒரு வரலாற்று புனைவு நாவல் என்பதால் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொருவரின் தோற்றத்தையும் மிகச் சிரத்தையாக வடிவமைத்திருந்தார் மணிரத்னம் என்று கூறினால் அது மிகையல்ல.
ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்திற்காக ஜெயராம் குடுமி வைத்து நடித்திருந்தார். அதேசமயம் இவரது கதாபாத்திரத்திற்காக வேறு ஒரு கெட்டப்பை தான் முதலில் மணிரத்னம் உருவாக்கி வைத்திருந்தார் என்கிற விஷயம் தற்போது நடிகர் ஜெயராம் மூலம் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகள்: அதிர்ச்சி.. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீர் என வெளியேறுகிறாரா ஆயிஷா..?
அப்படி உருவாக்கப்பட்ட ஆழ்வார்க்கடியான் நம்பியின் இன்னொரு தோற்றத்தையும் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தில் இடம்பெற்றிருந்த தோற்றத்தை விட இது இன்னும் இளமையாக இருப்பதாக உள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.