அதிர்ச்சி.. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீர் என வெளியேறுகிறாரா ஆயிஷா..?
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், முக்கிய போட்டியாளர்களின் ஒருவரான ஆயிஷா நிகழ்ச்சியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் முதல் சீசனுக்கு பிறகு, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்றால் அது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தான். மிகவும் பிரபலமான வெள்ளித்திரை நடிகர் - நடிகைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள வில்லை என்றாலும், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள், நடன இயக்குனர்கள், சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய போது, 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில்... கடந்த ஞாயிற்றுக்கிழமை மைனா நந்தினி வயல் கார்டுபோட்டியாளராக உள்ளே நுழைந்தார்.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் வசூல் எத்தனை கோடி? அதிகார பூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம்!
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் புதுமையான டாஸ்க்கள் கொடுத்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கி உள்ளனர் பிக்பாஸ் குழுவினர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென முக்கிய போட்டியாளரான ஆயிஷா வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிகவும் சென்சிடிவ்வான போட்டியாளராக அறியப்படும் ஆயிஷாவிற்கு ஏற்கனவே ஒருமுறை மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பின்னர் பிக்பாஸ் மருத்துவ குழுவினர், அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதை தொடர்ந்து இன்று மீண்டும் டாஸ்கின் போது மூச்சு திணறலால் அவதி படுகிறார். பின்னர் அவருக்கு தைலம் போன்ற முதலுதவி கொடுத்து தேற்றியுள்ளனர் போட்டியாளர்கள். பின்னர் மருத்துவ குழுவினரும் வந்து சிகிச்சை கொடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷுடன் எடுத்து கொண்ட ஸ்டைலிஷ் போடோஸை வெளியிட்டு... புகழ்ந்து தள்ளிய 'பாண்டியன் ஸ்டோர்' கதிர்!
இவருக்கு தற்போது மூச்சு திணறல் ஏற்பட்டு பின்னர் அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ஒருமுறை மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் அவதியுற்ற நிலையில் மற்ற போட்டியாளர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை கொடுத்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு உடல் நலமின்றி போவதால், அவர் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.