பொன்னியின் செல்வன் வசூல் எத்தனை கோடி? அதிகார பூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம்!
'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் வெளியாகி 20 நாட்கள் ஆகும் நிலையில், இந்த படத்தின் வசூல் விவரம் குறித்த தகவலை... லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பலர் எடுக்க முயற்சித்து எடுக்க முடியாமல் போன கதை தான், கல்கியின் கைவண்ணத்தில் உருவான 'பொன்னியின் செல்வன் 1'. சோழ மன்னர்களின் ஆட்சி குறித்தும், அவர்களின் வீரம், இளவரசிகளின் சாதுரியம், கோபம், வஞ்சகம், தந்திரம் போன்ற அனைத்து ஒரு சேர புனையப்பட்ட கதை தான் 'பொன்னியின் செல்வன்'.
சுமார் 5 பாகங்களாக எழுதப்பட்ட இந்த படத்தை, எம்ஜிஆர், கமலஹாசன், போன்ற ஜாம்பவான்கள் எடுக்க முயற்சித்தும் அது முடியாமல் போனது. எனவே, கடந்த 20 வருடமாக இந்த கதையை படமாக எடுக்க முயற்சித்து வந்தவர் தான் இயக்குனர் மணிரத்னம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த படத்தை தற்போது படமாக்கி உள்ளார்.
மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷுடன் எடுத்து கொண்ட ஸ்டைலிஷ் போடோஸை வெளியிட்டு... புகழ்ந்து தள்ளிய 'பாண்டியன் ஸ்டோர்' கதிர்!
இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியானதில் இருந்து, தமிழகம் மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்தே காணப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் அதிகமாக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை கைப்பற்றியுள்ளது 'பொன்னியின் செல்வன் 1'. படம் வெளியான 20 நாட்களில் இந்த படத்தின் வசூல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதாவது இப்படம் மொத்தம் 450 கோடி வசூலை பெற்றுள்ளதாம். ஏற்கனவே தமிழகத்தில் மட்டும் இப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் விக்ரம் படத்தின் வசூலையும் மிக குறுகிய நாட்களில் முறியடித்துள்ளது 'பொன்னியின் செல்வன் 1'. முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வெற்றியைத் தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு மும்முரமாக தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 71 வயது நடிகருக்கு ஹீரோயினாகும் ஜோதிகா..! பிறந்தநாளில் வெளியானது படத்தின் டைட்டில்..!
ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பின்னணி இசை சில விமர்சனங்களுக்கு ஆளான போதிலும், படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, படக்குழு வசூல் விவரம் குறித்து அதிகார பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.