57 வயதில்... 23 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாரா நடிகர் பப்லு? வைரலாகும் தகவல்!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த, பப்லு 57 வயதில்.. 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழில் 1971 ஆம் ஆண்டு வெளியான 'நான்கு சுவர்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு. இந்த படத்தை தொடர்ந்து 'நீதி', 'டாக்டர் சிவா', 'நாளை நமதே', 'பாரதவிலாஸ்', போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'நான் சிவப்பு மனிதன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், அஜித் நடித்த 'அவள் வருவாளா', 'சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' நாகார்ஜுனாவுடன் 'பயணம்' போன்ற பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மொழியை தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி 'கோகுலத்தில் சீதை', 'அரசி', 'வாணி ராணி', 'மர்ம தேசம்' போன்ற பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் வசூல் எத்தனை கோடி? அதிகார பூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம்!
சிறந்த நடிகர் என்பதை தாண்டி, ஒரு டான்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பப்லு 23 வயது பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக, வெளியாகியுள்ள தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 1994 ஆம் ஆண்டு, பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 25 வயதில் மகன் ஒருவரும் உள்ளார். இவர் ஆடிசமால் பாதிக்கப்பட்டவர். தன்னுடைய மகனை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இன்னொரு குழந்தையை கூட பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் மகன் ஆடிசமால் பாதிக்கப்பட்டதால், சில வருடங்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த பப்லு, திரையுலகில் இருந்தும் விலகி இருந்தார்.
மேலும் செய்திகள்: அதிர்ச்சி.. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீர் என வெளியேறுகிறாரா ஆயிஷா..?
தற்போது மீண்டும் சீரியல்களில் கலக்கி வரும் பப்லு, கடத்த சிலவருடங்களாக மனைவி பீனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், மலேசியாவில்... பப்லுவிக்கு தொழில் ரீதியாக சில உதவிகள் செய்த, பெண்ணுக்கும் இவருக்கும் இடையே மலர்ந்த காதல் தற்போது திருமணத்தில் முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனதில் பட்ட விஷயங்களை, பட்டு பட்டு என்று பேசும் பப்லு இது குறித்தும், விரைவில் பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷுடன் எடுத்து கொண்ட ஸ்டைலிஷ் போடோஸை வெளியிட்டு... புகழ்ந்து தள்ளிய 'பாண்டியன் ஸ்டோர்' கதிர்!