பாக்ஸ் ஆபிஸில் வசூல் ராஜாவாக மாறிய மதகஜராஜா! 8 நாட்களில் இத்தனை கோடி கலெக்ஷனா?
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த மதகஜராஜா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
Madhagajaraja
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் முதன்முறையாக நடித்த படம் மதகஜராஜா. கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நிதிப்பிரச்சனையில் சிக்கியதால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதையடுத்து ஆம்பள, ஆக்ஷன் என சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து அப்படங்களையும் ரிலீஸ் செய்துவிட்டார் விஷால். ஆனால் மதகஜராஜா மட்டும் 12 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு அப்படத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.
Madhagajaraja Pongal Release
அதன்படி இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் இருந்து நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் விலகியதை அடுத்து, மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் பலமுறை இப்படம் இதுபோன்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதால், இந்த முறையும் படம் ரிலீஸ் ஆகாது என்று தான் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் அனைத்து பிரச்சனையும் தீர்க்கப்பட்டுவிட்டதாக படக்குழுவே பேட்டி அளித்ததை தொடர்ந்து தான் ரசிகர்களுக்கு நம்பிக்க வந்தது.
இதையும் படியுங்கள்... விஷாலை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட கெளதம் மேனன்! அவரின் அடுத்த பட ஹீரோ இவரா?
Madhagajaraja Collection
அந்த வகையில் கடந்த ஜனவரி 12ந் தேதி பொங்கல் விருந்தாக மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது. சந்தானம் காமெடி, விஷாலின் ஆக்ஷன், அஞ்சலி மற்றும் வரலட்சுமியின் கிளாமர் என அனைத்தும் அடங்கிய ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக இப்படம் இருந்ததால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சிறந்த ட்ரீட் ஆக மதகஜராஜா அமைந்தது. அதுமட்டுமின்றி பேமிலி ஆடியன்ஸை கவர்ந்ததால் மதகஜராஜா திரைப்படம் இந்த ஆண்டின் பொங்கல் வின்னர் ஆனது.
MadhaGajaRaja Box Office
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மதகஜராஜா திரைப்படம் தான் அதிக வசூலை வாரிக்குவித்துள்ளது. இப்படம் ரிலீஸ் ஆகி 8 நாட்கள் ஆகும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.40 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. விரைவில் இப்படம் 50 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையையும் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2013ம் ஆண்டு வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் தற்போது அதைவிட 3 மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்துள்ளதால் படக்குழுவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... 12 ஆண்டுகளுக்கு முன் விஜய் கைவிட்ட படம்; தூசிதட்டி எடுக்கும் விஷால்!