OG Movie : பவர் ஸ்டார் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஓஜி பிரீமியர் காட்சிகள் ரத்து!
Pawan Kalyan OG Movie : பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஓஜி படத்திற்கு பிரீமியர் காட்சிகள் இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், நள்ளிரவு சிறப்பு காட்சிகளால் கொண்டாட்டம் களைகட்டும்.

பவன் கல்யாணின் 'ஓஜி'
பவன் கல்யாணின் 'ஓஜி' திரைப்படம் செப்டம்பர் 25-ல் வெளியாகிறது. சுஜித் இயக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகி. இம்ரான் ஹஷ்மி வில்லனாக நடிக்க, படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரசிக்கும் சதீஷூக்கும் திருமணமா? அரசியின் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீக்ரெட்ஸ்!
இசையமைப்பாளர் தமனின் இசை
இசையமைப்பாளர் தமனின் இசை படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் சாதனைகளை படைத்து வருகின்றன.
பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும் ரஜினிகாந்தின் டாப் 3 படங்கள்: கூலி படத்திற்கு 3ஆவது இடம்!
ஓஜி படத்திற்கு பிரீமியர் இல்லை
பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு நாள் முன்பே பிரீமியர் ஷோக்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் ஓஜி படத்திற்கு பிரீமியர் இல்லை என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். பதிலாக, செப்டம்பர் 25 நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.
படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பால், பிரீமியர் காட்சிகளின் போது பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என கருதி தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
வெளிநாடுகளில் ஓஜி படத்தின் முன்பதிவு அமோகமாக உள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாக்கோலமாக மாற்ற தயாராகி வருகின்றனர்.