பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும் ரஜினிகாந்தின் டாப் 3 படங்கள்: கூலி படத்திற்கு 3ஆவது இடம்!
ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்த கூலி படம் இதுவரையில் ரூ.550 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து 2025 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை படைத்து வருகிறது.

ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்து வெளியான படம் தான் கூலி. முழுக்க முழுக்க ரஜினிக்கான படமாக வெளியான இந்தப் படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. மேலும் படம் முழுவதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இந்தப் படமும் ஒன்று. ஜெயிலர், வேட்டையன் படங்களுக்கு பிறகு கூலி படம் வெளியானது.
என்ன பேய பாத்த மாதிரி பாக்குறீங்க: ரூ. 10 லட்சத்த வாங்கிட்டு போன பாண்டியனின் அக்கா!
ரஜினிகாந்த் கூலி படம்
இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, சோபின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரச்சிதா ராம் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
கூலி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பேன் இந்தியா படமாக வெளியான கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியாகி 25 நாட்களுக்குப் பிறகு உலகளவில் ரூ.550 கோடியைத் தாண்டியது. மேலும், உலகளவில் ரூ.600 கோடியை வசூலித்த முதல் ஏ சான்றிதழ் பெற்ற தமிழ் படம் என்ற சாதனையை கூலி படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடியை நெருங்கி வருகிறது. இது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்.. ஷாக்கான சாமுண்டீஸ்வரி நடந்தது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
கோலிவுட்டில் அதிக வசூல் குவித்த ரஜினியின் டாப் 2 படங்கள்
இந்தப் படத்தில் ரஜினியின் வயதான தோற்றத்தை குறைக்கும் விளைவுகள், அதிரடி காட்சிகள் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், சமூக வலைதளங்களில் கூலி படத்தின் அறிமுக காட்சியின் கிளிப்புகள் மற்றும் வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன. இந்த ஆண்டில் இதுவரையில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை கூலி படம் படைத்துள்ளது. இது கோலிவுட் வரலாற்றில் 2.0 (ரூ.835 கோடி வசூல்) மற்றும் ஜெயிலர் (ரூ.650 கோடி வசூல்) ஆகிய படங்களுக்கு பிறகு 3ஆவது அதிக வசூல் செய்த படமாக கூலி படம் சாதனை படைத்துள்ளது.
கூலி ஓடிடி ரிலீஸ்
கூலி படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியிலும் வெளியிடப்பட்டுள்ளது. கூலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.