- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அரசிக்கும் சதீஷூக்கும் திருமணமா? அரசியின் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீக்ரெட்ஸ்!
அரசிக்கும் சதீஷூக்கும் திருமணமா? அரசியின் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீக்ரெட்ஸ்!
Pandian Stores 2 : குமரவேல் மீதான கோர்ட் வழக்கை அரசி திரும்ப பெற்ற நிலையில் அரசிக்கு இப்போது திருமண நடக்க இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. அரசி யாரை திருமணம் செய்து கொள்வார் என்பது பற்றி பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியலில் குமரவேல் மீது கொடுத்த கேஸை அரசி வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து குமரவேலுவும் தனது தவறை உணர்ந்து அரசி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக செய்தி வெளியாக பாண்டியனின் அக்கா மற்றும் அவரது மகன் இருவரும் செய்தியில் அரசி மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்டனர். அதன் பிறகு மீண்டும் அரசியை திருமணம் செய்து கொள்ள சதீஷ் ஆசைப்பட்ட நிலையில் தனது மகனுக்காக அரசியை பெண் கேட்டு பாண்டியனின் அக்கா உமா வந்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும் ரஜினிகாந்தின் டாப் 3 படங்கள்: கூலி படத்திற்கு 3ஆவது இடம்!
பாண்டியன் வீட்டிற்கு வந்த உமா
அவரைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடையவே, தான் எதற்காக வந்தேன் என்பதை விளக்கமாக கூறுகிறார். ஏதோ நடந்தது நடந்துவிட்டது, இனியும் பழசை நினைப்பதில் என்ன நியாயம் இருக்கு. அதனால், அரசிக்கும் சதீஷூக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று உங்களிடம் கேட்க வந்திருக்கிறேன் என்று உமா கேட்டார். இதற்கு பாண்டியன், கோமதி மற்றும் அரசி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
என்ன பேய பாத்த மாதிரி பாக்குறீங்க: ரூ. 10 லட்சத்த வாங்கிட்டு போன பாண்டியனின் அக்கா!
அரசிக்கும் சதீஷூக்கும் திருமணமா?
இதற்கு முன்னதாக அரசி மற்றும் சதீஷ் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முகூர்த்த தேதியும் வந்தது. அப்போது தான் அரசியை குமரவேல் கடத்தி சென்றார். அதன் பிறகு அடுத்த நாள் அதாவது, அரசிக்கும் சதீஷிற்கும் திருமணம் நடக்க இருந்த அந்த நாளில் அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேலுவை மட்டுமின்றி அவரது குடும்பம், தனது குடும்பம் என்று எல்லோரையும் ஏமாற்றி வாழ்ந்து வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அரசி ஓடிப் போனதாக எண்ணிக் கொண்டு அவரையும், அவரை குடும்பத்தையும் உமா அசிங்கப்படுத்தியதோடு நிச்சயத்திற்கு மண்டபம் செலவு உள்பட தங்களுக்கு ரூ.10 லட்சம் செலவாகிவிட்டது என்று கூறி அதனை வலுக்கட்டாயமாக வாங்கி கொண்டு அவர்களது குடும்பத்திற்கு சாபம் விட்டுச் சென்றனர். இப்போது எதுவுமே நடக்காதது போன்று திரும்பவும் பாண்டியனின் வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக வந்துள்ளார்.
அரசிக்கும் குமரவேலுவுக்கும் திருமணம் நடக்குமா?
இது ஒரு புறம் இருக்க, குமரவேலுவும் அரசியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இது குறித்து காந்திமதியிடம் அரசியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதை குமரவேல் கண்ணீர்மல்க கூறியுள்ளார். அதற்கு காந்திமதியோ இறைவனின் சித்தம் எதுவோ அதுப்படியே நடக்கட்டும். அரசியை நீ திருமணம் செய்து கொள்ள இருந்தால் அது கண்டிப்பாக நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலமாக அரசியை யார் திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவரது முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாகவும் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.