- Home
- Cinema
- Parasakthi : சிவாகார்த்திகேயன் மவுஸ் இவ்வளவுதானா? 'பராசக்திக்கு' வெறும் 24 டிக்கெட்தான் புக் ஆகிருக்கு! திண்டுக்கல் ரிப்போர்ட்
Parasakthi : சிவாகார்த்திகேயன் மவுஸ் இவ்வளவுதானா? 'பராசக்திக்கு' வெறும் 24 டிக்கெட்தான் புக் ஆகிருக்கு! திண்டுக்கல் ரிப்போர்ட்
இன்று ரிலீஸான பராசக்தி திரைப்படத்திற்கு திண்டுக்கல்லில் வெறும் 24 டிக்கெட்கள் தான் விற்பனையாகியுள்ளன. சிவகார்த்திகேயனுக்கு மவுஸ் இவ்வளவு தானா? என்ன காரணம் என இந்தப் பதிவில் காணலாம்.

சுதா கொங்கர இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன் அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள 'பராசக்தி' படம் இன்று காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பராசக்தி படத்திற்கு தணிக்கை குழு U/A 16+ சான்றிதழ் அளித்தது. தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படத்திருக்கான டிக்கெட் விற்பனையும் உடனடியாக தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.
பராசக்தி படமானது தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பராசக்தி படம் இன்னும் 20 நிமிடத்தில் வெளியாகவுள்ள நிலையில், 770 சீட்க்கு வெறும் 24 டிக்கெட் தான் விற்பனையாகியுள்ளதாக திண்டுக்கல் சினிமாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதற்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஜனநாயக தள்ளிவைப்பால் திண்டுக்கல்லில் சிவகார்த்திகேயனின் மவுஸ் குறைகிறதா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

