- Home
- Cinema
- சென்சார் போர்டு கொடுத்த கிரீன் சிக்னல்... பொங்கலுக்கு சிங்கம்போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் பராசக்தி
சென்சார் போர்டு கொடுத்த கிரீன் சிக்னல்... பொங்கலுக்கு சிங்கம்போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் பராசக்தி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதால் அதன் ரிலீஸ் உறுதியாகி உள்ளது.

Parasakthi Movie Censor
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இப்படத்தின் முதன்முதலில் சூர்யா தான் நாயகனாக நடிக்க இருந்தார். அவரை வைத்து புறநானூறு என்கிற பெயரில் இப்படம் தயாராகவிருந்தது. ஆனால் அறிவிப்போடு அதனை டிராப் பண்ணினார்கள். சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து இந்த கதைக்குள் சிவகார்த்திகேயன் வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கியது.
பராசக்தி பட்ஜெட்
பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன், பேசில் ஜோசப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் சுமார் ரூ.140 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவர் இசையமைக்கும் 100வது படம் இதுவாகும்.
இழுத்தடிக்கப்பட்ட சென்சார் சான்றிதழ்
பராசக்தி திரைப்படம் ஜனவரி 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரிலீஸ் நெருங்கினாலும் நேற்று வரை இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. முன்னதாக ஜனநாயகன் படம் இறுதிவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியது. அதேநிலை பராசக்தி திரைப்படத்திற்கும் ஏற்படுமோ என்கிற பயத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில், ஒருவழியாக இன்று பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
பராசக்திக்கு சென்சார் வந்தாச்சு
அதன்படி பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. இதன்மூலம் பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ளது. இந்த பொங்கலுக்கு ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுவதாக இருந்தது. ஆனால் சென்சார் வழக்கு காரணமாக ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் சிங்கிளாக ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாட இருக்கிறது. அதற்கு போட்டியாக வேறு ஏதாவது படங்கள் களத்தில் இறங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

